பிரியங்கா திருமணத்தின் போது போடப்பட்ட சிகப்பு ஷால் இதற்கு தானா? அந்த நொடி அழுதுட்டாங்க! தோழி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே பிரியங்காவின் இரண்டாவது திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றது. இவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பிரியங்கா திருமணத்தின் போது போடப்பட்டிருந்த சிவப்பு ஷால் குறித்து அவருடைய நெருங்கிய தோழி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக பிரபலங்கள் வீட்டு திருமணம் என்றாலே அவர்களுடைய வீட்டில் செய்யும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட இது எதற்காக என்ற ஒரு கேள்வியை எழுப்பி வடுகிறது. அதிலும் சமீப காலமாக பலருடைய வீட்டில் சங்கீத், மெஹந்தி பங்க்ஷன் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் திருமணம் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி விடுகிறது. ஆனால் விஜய் டிவி பிரபலமான ப்ரியங்கா இரண்டாவது திருமணத்தை ரகசியமாக வைத்து திருமணம் முடிந்த பிறகு தான் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

Vijay TV Priyanka

எளிமையான திருமணம்

பிரியங்காவின் திருமண செய்தி பற்றி சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தில் கூட பிரியங்காவின் நெருங்கிய ஒரு சில நண்பர்கள் மட்டும்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல பிரியங்காவின் அம்மா மற்றும் அவருடைய தம்பி உட்பட ஒரு சில உறவினர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பிரியங்காவின் திருமணம் எளிமையாகவும் ரகசியமாகவும் நடத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தோழியின் பேட்டி

இந்த நிலையில் பிரியங்காவின் நெருங்கிய தோழியான அக்ஷயா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது பிரியங்கா சில விஷயங்களை வெளியே சொல்லவே மாட்டார். அதிலும் அவருடைய பர்சனல் வாழ்க்கையை வெளியில் பேசி பரபரப்பை ஏற்படுத்த மாட்டார். எல்லாவற்றையும் மனதிற்குள் அமைதியாக வைத்திருப்பார். அதே நேரத்தில் அவருடைய வேலை என்று வந்துவிட்டால் எல்லோரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார் என்று கூறியிருக்கிறார்.

வெளியே சொல்வதில்லை

அதோடு பிரியங்காவின் திருமணத்தில் நடந்த சில விஷயங்கள் பற்றியும் பேசி இருந்தார். அதில் பிரியங்கா எப்போதும் போல மேக்கப் போடும்போது கூட ஜாலியாக விளையாடிக் கொண்டே இருந்தார். அதுபோல அவர் புடவைக்கு மேலே சிகப்பு ஷால் அணிந்திருந்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு தனிப்பட்ட அல்லது சிறப்பான காரணம் என்று எதுவும் கிடையாது.

பிரியங்காவின் ஷால் ரகசியம்

இப்போது எல்லோருமே ஒரு யூனிக் கலரில் பிரைடல் ட்ரெஸ்ஸிங் பண்ணும் போது ஒரு அடர்த்தியான கலரில் ஷால் போடுவது ட்ரெண்டாக இருக்கிறது. அது புடவையின் பார்டர் கலரில் சிலர் போடுகிறார்கள், அதேபோல ஒரு சிலர் கோல்ட் கலர் அல்லது ஒயிட் கலர் புடவை கவுன் போடும் போது இதுபோல கான்ட்ரஸ்ட்டாக ஒரு கலரை துப்பட்டாவாக பயன்படுத்தும் போது அது வித்தியாசமான லுக் ஆகவும் இருக்கிறது. அதற்காகத்தான் பிரியங்கா இதை போட்டு இருந்தாங்க வேறு ஒரு காரணமும் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிரியங்காவின் அழுகை

அதுபோல பிரியங்கா மேக்கப் பண்ணிக் கொண்டிருக்கும் போது கண்ணாடி முன்பு அவரை பார்த்துக்கொண்டே இருந்தார். ஆனால் அவருடைய மனதிற்குள் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கொண்டே இருந்தது. அவர் எதையுமே வெளியே சொல்லவே இல்லை. அவருடைய கணவர் தாலி கட்டிய நேரத்தில் டக்கென்று கண்கலங்கி அழுதுட்டாங்க. அதை யாரும் எதிர்பார்க்கல. அவங்க அழுததை பார்த்து அவங்களுடைய குடும்பத்தினரும் எமோஷனல் ஆகிட்டாங்க. பிரியங்காவின் கல்யாணத்தில் கொஞ்சம் பேர் தான் கலந்துக்கிட்டாங்க என்று அவருடைய தோழி அக்ஷயா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+