அப்போ அப்படியெல்லாம் பேசிய ப்ரியங்கா...பின்பு ரொம்பவே மாறி விட்டார்... தாமரையின் வருத்தம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பிரியங்கா செயல்பாடு பற்றி தாமரைச்செல்வி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் தாமரைச்செல்வி தான் அனைவரையும் நம்பி அன்பால் ஏமாந்து விட்டதாகவும் தற்போது எல்லாரையும் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டோடு விளக்கம் கூறியுள்ளார்.

அல்டிமேட்டில் அறிமுகம்
தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் அறிமுகமாகி இருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் இருந்து இதில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும், 5 வது சீசனில் அதிக நாட்கள் வீட்டிற்குள்ளே இருந்த போட்டியாளர் ஆகவும், தற்போது தான் அந்த நிகழ்ச்சி முடிந்து இருந்தாலும் அதிலிருந்து ஒரு போட்டியாளராக தாமரைச்செல்வி கலந்து கொண்டுள்ளார். தான் அது வெளியாக இருந்து விட்டதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருடைய சுய ரூபத்தை புரிந்து கொண்டுள்ளதாகவும் தாமரைச்செல்வி தற்போது கூறியுள்ளார்.

தாமரை பிரியங்காவின் நட்பு
கிராம பின்னணியில் இருந்து நாட்டுப்புற கலைஞர்களின் சார்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான தாமரைச்செல்வி ஆரம்பம் முதலே பிரியங்கா உடன் நெருக்கமாக இருந்தாலும் பல நேரங்களில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்துகொண்டிருந்தது. டாஸ்க் நேரத்தில் பிரியங்கா மற்றும் தாமரைச்செல்வி அதிகமாக அடித்துக் கொண்டாலும் மற்ற நேரங்களில் இருவரும் பாசமழை பொழிந்து கொண்டனர். என்னதான் தாமரைச்செல்வி பிரியங்கா மீது கோபத்தில் இருந்தாலும் பிரியங்கா சாப்பாடு வேண்டும் என்று சொன்னதும் உடனே அவருக்காக சாப்பாடு பலமுறை செய்து கொடுத்திருக்கிறாராம்.

ஒரு போன் கூட வரலையே
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பிரியங்கா தாமரைச்செல்வி நான் உன்னுடைய வாழ்க்கையை அப்படி மாற்றி விடுவேன், என்னால் உன் லைஃப் மாறப் போகிறது என்றெல்லாம் பலமுறை கூறி இருக்கிறாராம். ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவர் இதுவரைக்கும் ஒரு போன் கூட தாமரைச்செல்விக்கு செய்தது இல்லையாம். பிரியங்கா ஒரு பெரிய பிரபலம் என்பதால் தாமரைச்செல்வி அவரிடம் போன் நம்பர் வாங்கவில்லையாம். ஆனால் பிரியங்கா நினைத்திருந்தால் தாமரைச் செல்வியின் நம்பரை வாங்கி போன் செய்து இருக்கலாம், ஆனால் அவர் என்னிடம் பேசவில்லை என்று நேற்றைய எபிசோடில் தாமரைச்செல்வி அனிதாவிடம் கூறியிருக்கிறார்.

தாமரைச் செல்வியின் வருத்தம்
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இவரோடு நெருங்கி பழகி வந்த அக்ஷரா கூட பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதும் இவருக்காக டிரஸ் எல்லாம் வாங்கி அனுப்பி இருக்கிறாராம். ஏற்கனவே அவர் சொன்னது போலவே பல விஷயங்களை அக்ஷரா செய்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
தாமரைச்செல்வி இடமும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். ஆனால் ப்ரியங்கா மட்டும் உள்ளே அவ்வளவு நெருக்கமாக பழகி விட்டு வெளியே வந்ததும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். அவருடைய தேவைக்காகவும், தன்னோடு நெருங்கிப் பழகினால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து தான் அவர் அப்படி செய்து கொண்டிருந்தார் என்று கூட எனக்கு நினைக்கத் தோன்றுகிறது என்று தாமரைச்செல்வி கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications