சாப்பாடு தான் முக்கியம் என்பதை நிரூபித்த ப்ரியங்கா...கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த சூழ்நிலையிலும் நமக்கு முக்கியம் சாப்பாடு என்பதை பிரியங்கா நிரூபித்துவிட்டார்.

பிரியங்காவின் செயலைப் பார்த்து ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர்.

எப்போதும் நான் நானாகத்தான் இருப்பேன் என்பதை இவர் வெளிப்படையாக காட்டிவிட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கேரக்டர் மாறவில்லையே

கேரக்டர் மாறவில்லையே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் அறிமுகமான போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் பிரியங்கா செய்யும் செயல்கள் அடிக்கடி வைரல் ஆகி விடும். இவர் தன்னுடைய போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவருடைய ரசிகர்கள் பலர் இங்கே போக வேண்டாம் என்று கூறி வந்ததாக ஏற்கனவே பிரியங்கா கூறி இருந்தாலும், நான் எந்த இடத்தில் இருந்தாலும் தன்னுடைய கேரக்டர் மாறாது என்பதை அடிக்கடி பிரியங்கா நிரூபித்துக் கொண்டு வருகறார்.

யாரை பற்றியும் கவலை இல்லை

யாரை பற்றியும் கவலை இல்லை

அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காமல் தன்னுடைய தேவைதான் தனக்கு முக்கியம் என்பதை அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார். நேற்றைய எபிசோட்டில் போட்டியாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்வதற்காக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் போது, கிடைத்த கொஞ்ச நேரத்தில் கூட தன்னுடைய உடம்பை கவனித்துக் கொண்டால் தான் தன்னால் கவனமாக விளையாட்டை கலக்க முடியும் என்பதை அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

செண்பகமே செண்பகமே டாஸ்க்

செண்பகமே செண்பகமே டாஸ்க்

நேற்றைய எபிசோட்டில் அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியாளர்கள் இரண்டு அணியாக செயல்பட்டு வந்தனர். செண்பகமே செண்பகமே என்று வித்தியாசமான ஒரு டாஸ்க் வைத்திருந்தனர். இதில போட்டியாளர்கள் ஆரஞ்ச் மற்றும் ப்ளூ உறுப்பினராக தங்களுடைய திறமையை காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் பிக்பாஸ் அறிவுறுத்தல் கூறிய ஒரு சில நேரத்தில் ப்ளூ அணிக்காக ரெடியான பிரியங்கா, கிடைத்த வாய்ப்பில் தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

சாப்பாடு தான் முக்கியம்

சாப்பாடு தான் முக்கியம்

என்னதான் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் முட்டிமோதி கொண்டிருந்தாலும் நமக்கு முக்கியம் சாப்பாடு தான் என்பதை பிரியங்கா எப்போதும் போல இப்போதும் நிரூபித்து விட்டார். இவர் சாப்பிட்டுவிட்டு எனர்ஜியாக டாஸ்க் விளையாடியதை பார்த்ததும், பிரியங்காவின் எனர்ஜிக்கு இதுதான் காரணமா??என்று நெட்டிசன்கள் ஒருபுறம் கலாய்த்துக் கொண்டு இருக்கும்போது, எங்க தல எப்போதுமே வேற லெவல் தான். கேமராவுக்காக நடிக்காமல் தன்னுடைய ஒரிஜினல் குணத்தை உலகிற்கு காட்டி விட்டார் என்று பிரியங்காவின் தீவிரமான ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+