ஃபுல்லா ப்ளூ.. பளிச்சுன்னு தூக்கல் அழகுடன்.. பிரியங்கா நல்கரி!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருக்கும் ரோஜா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்க நல்கரி நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரோஜா சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கும் பிரியங்க நல்கரி பல ரசிகர்களும் ரோஜா என்றுதான் செல்லமாக கூப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு . சீரியல் மூலமாக இவர் கேரக்டராவே மாறி விட்டார்.
இவருக்கு முதல் சீரியலில் இந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கிடைக்கும் என்று அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

மாடலிங்கிலிருந்து சினிமா
சீரியல் மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பிஸியாக இருக்கும் இவருக்கு இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய மேல் படிப்பை முடித்து விட்டு தனது சகோதரிகளை படிக்க வைத்தது இவர் தானாம். அந்த நேரத்திலிருந்து பிஸியாகவே வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அதன்பிறகு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்ததும் அதன் மூலமாக இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தீயாய் வேலை செய்யும் பிரியங்கா
அதன் மூலமாக சில தெலுங்கு சீரியல்களில் அறிமுகமாகியிருக்கிறார். அதன் பிறகு சில ரியாலிட்டி ஷோக்களிலும் தொகுப்பாளராகவும் தெலுங்கில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தெலுங்கில் இவரைப் பார்த்த பிறகுதான் சுந்தர் சி இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது . சின்ன ரோலாக இருந்தாலும் பரவால்லை தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் இவரும் உடனே சம்மதம் என்று சொல்லி இதில் நடித்திருக்கிறார் .

ஏற்றம் கொடுத்த ரோஜா
இந்த படத்தில் நடித்த இவருக்கு ரோஜா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது . ஆனால் படத்தில் நடித்ததை விடவும் இந்த சீரியல் மூலமாக பெரும் ரசிகர்களை இவர் பெற்றிருக்கிறார். சீரியல்களில் இவர் எப்போதும் பக்தி பழமாக நடித்திருப்பார் . ரோஜா மனமுருகி வேண்டினால் கடவுளே நேரில் வந்து விடும் என்றுதான் ரசிகர்கள் கூட எண்ணியிருப்பார்கள். அந்த அளவிற்கு இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார் நிஜத்திலும் பிரியங்கா இப்படி தானாம். எப்பவுமே கோவில் பூஜை என்று மங்களகரமாக இருப்பாராம்.

சேலையே பிடிக்காதாம்
சீரியலில் எப்போதும் சேலை கட்டிக் கொண்டு தான் இருப்பார். ஆனால் வீட்டில் சேலையைக் கழற்றி தூக்கிப் போட்டு விடுவாராம்.. அதாவது மாடர்ன் டிரஸ்தான் பெரும்பாலும். எப்பவுமே கவுன் போடுவது தான் ரொம்ப பிடித்தமானதாம். அதனால் வீட்டில் ஃப்ரீயாக கவுன் தான் போட்டுக்கொண்டு இருப்பாராம். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தளங்களை கதிகலங்க வைத்து வருகிறார் .

நீல ராணி
அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் சேலையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய யூடியூப் சேனல்லயும் ஒரு வீடியோவை அப்லோட் பண்ணி இருக்கிறார். அதுவும் வைரலாக பரவி வருகிறது. ப்ளூ கலர் சேலையில் பூவேஉனக்காக சீரியலுக்கான இவரது கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார் .அந்த சீன் மற்றும் படப்பிடிப்பை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இதுவும் வைரலாக பரவி வருகிறது.

வழியும் ரசிகர்கள்
போட்டோ ஷூட்டில் இவரைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் ஏகத்துக்கும் இவரை வர்ணித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். உருகி உருகி கமெண்டுகளை போடும் அவருடைய ரசிகர்கள் இவருடைய தமிழ் உச்சரிப்பையும் பேச்சையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறார்களாம். சில தமிழ் நடிகைகள் கூட ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

ஹோம்லி ரோஜா
பிரியங்கா, நீங்கள் இந்த அளவிற்கு தமிழில் பேசுகிறார்கள் என்று இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எவ்வளவுதான் அழகாக உடை அணிந்தாலும் அதிலும் நாங்கள் கலாய்ப்போம் என்று சில நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு வருவார்கள். அந்த மாதிரிதான் இவர் சேலையில் அழகாக ஹோம்லியாக உடை உடுத்தி இருந்தாலும் இவரையும் இதுதான் ப்ளூ ஃபிலிம் எல்லாமே ப்ளூ கலர் ஆக இருக்கிறது என்று இவரை கிண்டல் அடித்து வருகிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications