பஞ்சுமிட்டாய் கலரில்.. பொம்மை போல இருக்கிறீர்களே.. உருகி வழியும் ரசிகர்கள்
சென்னை: ரோஜா சீரியல் கதாநாயகி பிரியங்கா நல்கரி பெங்களூரில் நடத்திய போட்டோ ஷூட் போட்டோஸ்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதில் அவர் பஞ்சு மிட்டாய் கலருல ட்ரெஸ் போட்டு எடுத்து இருக்கும் போட்டோஸ்கள் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நாளா சீரியல்கள் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த இவர் பிசியாகியிருக்கிறார்.
இப்போ படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்திலும் நம்ம பிரியங்கா நல்கரி போட்டோஷூட்டில் பிஸியாக இருக்கிறார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன் ரசிகர்களுக்காக போட்டோக்களை எடுத்து குவித்து அப்லோட் பண்ணிட்டு இருக்கிறார்.

14 வயசிலேயே அரங்கேற்றம்
1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்திருக்கிறார். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத். அங்குதான் பள்ளி கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு நடனத்தில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அவரோட 14வது வயதிலேயே தெலுங்கு படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் பத்மபிரியாவின் சகோதரியாக நடித்திருந்தார். இதற்கு பிறகு நிறைய படங்களில் இவருக்கு தங்கச்சி ரோல் கிடைத்தது.

துறுதுறு முகம்
இவருடைய இன்னசெண்ட்டான முகமும் குழந்தைத்தனமான நடிப்பும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து இருந்ததால் இவர் எல்லாத்துலயும் தங்கச்சி ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். வெள்ளித்திரையை அடுத்து சின்னத்திரையிலும் இவர் தங்கச்சி ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். தெலுங்கில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதுமட்டுமல்ல சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்திருந்தார்.

தீயா வேலை செய்யணும் குமாரு
அதன்பிறகு தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் தோழியாகவும் நடித்திருக்கிறார். அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்க முடிவு எடுத்திருக்கிறார். அந்த டைம்ல தான் ரோஜா சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரோஜா சீரியலில் கதாநாயகியாகப் இப்போ கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கட்டி வைத்திருக்கிறார்
சன் டிவியில் ரொம்பவும் பிரபலமான சீரியல் ரோஜா சீரியல் தான் போய்க்கிட்டு இருக்கு. இந்த சீரியலுக்கு தான் டிஆர்பி ரேட் அதிகமாகவும் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் பிரியங்காவும் தான். அவர் இந்த சீரியல் மூலமாக தமிழில் ரசிகர்கள் பட்டாளத்தை கட்டி வைத்திருக்கிறார். இவருக்கு அதிகமாக இருப்பது பெண் ரசிகர்கள் மட்டுமல்ல ஆண்களும் கூடதான்.

பிரியங்காவின் அன்புப் பிடி
இப்படி தானாக சேர்ந்த ரசிகர் கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இன்னமும் ரசிகர்களை கூட்டுவதற்காக தான் தொடர்ந்து இணையதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி விதவிதமாக போஸ் கொடுத்து தள்ளுகிறார் போல. அது மட்டும் இல்லைங்க ராகவா லாரன்ஸின் தீவிர ரசிகையாம் இவர். அவருடன் காஞ்சனா 3 படத்தில் நடித்திருக்கிறார்.

காதல் முறிந்தது
இப்படி ஒரு பக்கமாக பிசியாக ஓடிக் கொண்டிருந்தாலும் கூட காதல் செய்வதற்கும் பிரியங்காவுக்கு நேரம் இருந்தது. நிச்சயதார்த்தம் வரை போய் பின்னர் அது முறிந்து போய் விட்டதுதான் சோகம். ஆனால் தற்போது இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று ஒரு ஃபேக் நியூஸ் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள இவர் தனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் என் திருமணம் நடைபெற்றால் நான் என் ரசிகர்களுக்கு தெரிவித்துவிட்டு தான் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

லேட்டஸ்ட் போட்டோக்கள்
எனக்கு திருமணம் முடிந்தது போல போட்டோஸ்கள் இணையதளத்தில் நீங்கள் பார்த்தால் அதை நம்ப வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இப்போ ரோஜா சீரியல் சூட்டிங் ஆரம்பித்து விட்டதால் அதில் அவர் பிஸியாக இருந்தாலும் போட்டோஸ்கள் எடுத்து ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறார். எப்படியோ பிரியங்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற தகவல் ரசிகர்கள் வாயில் பாலை ஊற்றியது போல ஜில்லுன்னு இருக்காம்.. ஜொள்ளுகிறார்கள்!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications