ரோஜா சீரியல் பிரியங்கா நல்கரி மீண்டும் சின்னத்திரையில் அறிமுகம்.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா? ஆரம்பமே அசத்தல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரி சில வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரையில் நடிகை இருக்கிறார். அதுவும் டாப் சீரியலில் தான் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் பிரியங்கா நல்காரி. ஆரம்ப காலத்திலேயே கேமரா முன் நின்ற அனுபவம் இருந்ததால், வளர்ந்த பிறகு நடிகையாகவும் தன்னம்பிக்கையுடன் முன்னேறினார்.

சினிமாவில் நடிப்பு
தமிழில் அவர் முதலில் சின்ன கேரக்டரில் தோன்றியிருந்தாலும், தீயா வேலை செய்யனும் குமாரு மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக மாறினார். குறிப்பாக, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் அவருடைய தோற்றம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
ரோஜா சீரியல் ஹீரோயினி
ஆனால், சினிமாவில் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் கிடைக்காத சூழலில், அவர் எடுத்த முக்கியமான முடிவு தான் சின்னத்திரைக்கு மாறுவது. அந்த முடிவு தான் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ரோஜா சீரியலில் நடித்த கேரக்டர் அவருக்கு மாபெரும் பிரபலத்தையும், குடும்பங்களின் அன்பையும் பெற்றுத்தந்தது. தமிழ் ரசிகைகள் பலரும் அவரை தங்கள் வீட்டில் ஒருவர் போல பார்க்க தொடங்கி விட்டனர் பல வருடங்களாக அந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அது முடிவடைந்த சமயத்தில் பலரும் இவரை மிஸ் பண்ணி வந்தனர்.
பிரபலம் கொடுத்த ரோஜா சீரியல்
இந்த சீரியலில் அவர் நடித்த ரோஜா கேரக்டர், சாதாரண பெண்ணின் போராட்டங்களையும், உணர்வுகளையும் நெருக்கமாக எடுத்துக் காட்டியது. இதனால், இவருக்கு என்ன அதிகமான ரசிகர்கள் உருவாக்கி இருந்தனர் . இந்த வெற்றிக்காக அவர் இரண்டு முறை சன் டிவி குடும்ப விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
ரோஜா வெற்றிக்குப் பிறகு, அவர் சீதாராமன் மற்றும் நள தமயந்தி போன்ற சீரியல்களில் நடித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெவ்வேறு முகங்களை காட்ட முயற்சித்த அவர், சீரியல்கள் மட்டுமல்லாமல் போட்டோஷூட்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனாலும் திடீரென அந்த சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். சமூக வலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
மீண்டும் சீரியல் என்ட்ரி
இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். கௌரி என்ற தொடரில் "மங்கா" என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கேரக்டர் வழக்கமான ஹீரோயின் கேரக்டரை விட வேறுபட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிரியங்கா சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சினிமாவில் ஆரம்பித்து, சீரியலில் உச்சம் தொட்ட பிரியங்கா நல்காரி, தற்போது தனது பயணத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications