உதடு விரிய சிரிப்பு.. தீப்பொறியாய் ஒரு விளக்கம்.. அசத்திய பிரியங்கா!
சென்னை: இவ்வளவு நாளா சிங்கிள் என சுற்றிக் கொண்டிருந்த ரோஜா தற்போது மாலையை கையில் பிடித்தபடி ஒரு அட்டகாசமான போஸ்ட் போட்டுள்ளார்.
நான் பலமுறை சொல்லிட்டேன்.. திரும்பத் திரும்ப சிலர் அவர்களோட பார்வையில் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். என்னால் மீண்டும் மீண்டும் விளக்க முடியாது என்று அவர் புதிராக ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.
ரோஜா மாலைக்குப் பக்கத்தில் இவர் சிரித்தபடி இருக்கும் போட்டோ இதில் இடம் பெற்றிருப்பதால் ரோஜாவைத் தேடி வந்த ராஜா யாரோ என்றும் சிலர் கலாய்க்கின்றனர்.

சீரியல் நடிகைகள்
தற்போது தமிழ் சீரியலில் நடிக்கும் பல நடிகைகளுக்கு தமிழே தெரியாது.. தமிழ் தாய்மொழியும் கிடையாது. நடிகைகள் தமிழில் பேசத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது ஹைதராபாத் பொண்ணாக இருந்தாலும் அவருக்குத் தெரிந்த அளவுக்கு தமிழை கற்றுக் கொண்டு க்யூட்டாக பேசி நடிப்பவர்தான் பிரியங்கா நல்கரி.

ரோஜாம்மா
தன்னுடைய செல்லமான தமிழினால் ரசிகர்களையும் இளைஞர்களையும் வசியப்படுத்தி வைத்திருக்கும் ரோஜா சீரியல் நாயகியின் பெயர் பிரியங்கா நல்கரி என்பது கூட பலருக்கும் தெரியாது. இவரை சன் டிவியில் ரோஜா சீரியலில் பார்த்தபிறகு பலரும் தங்கள் வீட்டுக்கு மருமகள் வந்தால் இப்படி ஒரு மருமகள் தான் வரணும் என்று ஏங்கிக் இருக்கின்றனர் .அந்த அளவிற்கு பாசத்தால் ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கிறார்.

குடும்ப கஷ்டம்
தன்னுடைய எந்த கஷ்டத்தையும் வெளியே காட்டாத இவர் இவருடைய வீட்டில் மூத்த பெண். ஸ்கூல் படிக்கும்போது குடும்பம் கஷ்ட நிலையில்தான் இருந்துள்ளது. பிரியங்காவுக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும் என்பதினால் இவருடைய அம்மா இவரை டான்ஸ் ஷோவில் கலந்துக்க வைத்திருக்கிறார் . அதில் இவருக்கு கிடைத்த பணத்தில்தான் இவருடைய படிப்பு செலவிற்கு செலவழித்திருக்கிறார்.

பாதியில் போன படிப்பு
இவருடைய இரு தங்கைகளின் படிப்பிற்காக தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் .சின்ன வயதிலிருந்தே நிறைய ஸ்டேஜ் ஷோவில் கலந்து கொண்டிருந்ததால் அதன் மூலமாக நடிப்புக்கு வந்திருக்கிறார். காலேஜ் டைம்ல இவருடைய உயரத்தையும் லுக்கையும் பார்த்து பலர் கலாய்த்து இருக்கின்றனர் .ஆனால் தற்போது அதே உயரத்தையும் ஸ்டிரச்சரும் தான் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது .

துருதுரு
இதனை நினைத்து தற்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறாராம். இவருடைய துருதுரு கேரக்டரையும் புசு புசு உடலமைப்பையும் பலருக்கும் பிடித்திருக்கிறது .ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைத்திருந்தவர்கள் மத்தியில் கொழுக்கு மொழுக்கு என்று இருந்தாலும் நம்ம சன் டிவி ரோஜா மாதிரி இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இவர் வலம் வருகிறார்.

ரோஜா மாலையுடன்
இவருக்கு ஏற்கனவே நிச்சயத்தார்த்தம் முடிந்திருக்கின்றது .ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .அதற்கு பிறகு இவர் சிங்கிளாத்தான் இருந்துவருகிறார் .அதனை பல இன்டர்வியூ களிலும் சொல்லியிருக்கிறார். ஆனால் தற்போது கையில் மாலையை பிடித்துக் கொண்டு க்யூட் சிரிப்புடன் இவர் இருப்பதைப் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் யாருக்காக வெயிட்டிங் என கலாய்த்து வருகின்றனர். ஆனால் அவரோ வித்தியாசமான மெசேஜ் போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications