முத்தம் கேட்டால் கோபப்பட மாட்டேன்.. கொஞ்சுவேன்... ஷாக் ஆகிய "ரோஜா"!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ரோஜாவாக நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி வெளியிட்ட வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
அதுவும் இன்ப அதிர்ச்சி. இந்த மாதிரி இருந்தா எங்களுக்குத்தான் கொண்டாட்டம் தானே என்று குதுகலிக்கும் ரசிகர்கள்.
பிரியங்கா நல்கரி முதல் சீரியலில் இந்த அளவிற்கு பிரபலம் ஆவார் என்று அவர் கூட நினைத்துப் பார்க்கவில்லை .அந்த அளவிற்கு ரோஜா சீரியல் மூலமாக அனைத்து ரசிகர்களின் வீடுகளின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

நம்பர் ஒன் சீரியல்
தற்போது வெளியிட்ட வீடியோவை பார்த்து தான் இவரா இப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். ஆனால் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள். சன் டிவியில் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் ரோஜா சீரியல் பிரியங்க நல்கரியை பார்த்து அனைவரும் ரோஜா என்று தான் அழைத்து வருகிறார்கள் .

ரசிகர்கள் மனதில் ரோஜா
அந்த அளவிற்கு அவர் ரசிகர்களின் மனதில் ரோஜாவாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார் .இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்துக் கொண்டிருப்பார் அதுமட்டுமில்லாமல் கூட இருப்பவர்களையும் விட்டுவைக்காமல் அவர்களையும் பாடாய்ப்படுத்தி நடிக்க வைத்து விடுவாராம்.

சமூக வலைதளங்களில் பிசி
அந்த வீடியோக்களும் போட்டோக்களும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இவருடைய போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருவார்கள். அந்த மாதிரிதான் தற்போது இவர் வெளியிட்ட வீடியோ வீடியோவுக்கு லைக்குகளும் கமெண்டும் எகிறி வருகிறது .

மாறி மாறி முத்தம்
தற்போது ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவில் நான் திடீரென்று மூடு மாறி முத்தம் கேட்டால் என்ன பண்ணுவாய் என்று ஒருவர் கேட்பது போலவும் அதற்கு அவர் நான் சீ தர மாட்டேன் என்று கூற வேண்டும் என்று தானே நீ நினைக்கிற ஆனா அப்படி நான் பண்ண மாட்டேன் நான் கொஞ்சுவேன் என்று கொஞ்சலாக ஒரு வீடியோவை எடுத்து இருக்கிறார் .இந்த வீடியோவை தன்னுடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .

ரசிகர்கள் கொஞ்சல்
இந்த மாதிரி வீடியோ வெளியிட்ட ரசிகர்களை கேட்கவா வேணும் அவர்களும் கொஞ்சி கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். சீரியலில் பிசியாக இருந்தாலும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். அதனால் தான் இவருக்கு சீரியல்களை போலவே சமூக வலைத்தளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

ஆசை மருமகன்
சீரியலில் இவரை பார்த்த பெண் ரசிகர்கள் மருமகனா இந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார்கள். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஆண் ரசிகர்களும் கட்டுனா இப்படி ஒரு பொன்னை தான் கட்ட வேண்டும் என்று வெறித்தனமாக காத்திருக்கிறார்களாம். அதனால் தான் இவருக்கு நாளுக்குநாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

பிரியங்காவுக்கு ஆதரவு
பிரியங்கா நல்கரி பல மொழிகளில் நடித்திருந்தாலும் அவருக்கு தமிழ் மொழிகளில் இருக்கும் ஆதரவு போல இதுவரைக்கும் எந்த மொழிகளிலும் இல்லையாம் .நாளுக்குநாள் ரசிகர்கள் அதிகரித்து டிஆர்பி இந்த சீரியல் முதல் இடத்தில் இருப்பதற்கு இவர்தான் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதனால்தான் தமிழையும் அழகாக பேச கற்று விட்டார். இவர் தமிழ் பேசும் அழகை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் .

மனதில் இடம் பிடித்தார்
ரோஜா சீரியல் மூலமாக இவர் அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் ரோஜாவே இடத்தை பிடித்து விட்டார் .இவருக்கு ஏற்கனவே எங்கேஜ்மென்ட் முடிந்து திருமணம் நின்று விட்ட நிலையில் தற்போது இந்த சீரியலில் இவருக்கும் அஸ்வினுக்கும் நன்றாகவே காமினேஷன் செட்டாகி இவர்களுக்குள் காதல் ரசம் சொட்டிக் கொண்டிருக்கும்போது தற்போது இவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்து இவருடைய ரசிகர்கள் என்ன திடீரென இப்படி மாறி விட்டீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்












Click it and Unblock the Notifications