இந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அலப்பறையை..பிரியங்காவின் லூட்டி ஆரம்பம்.. இப்படியா செய்வாங்க??
சென்னை: தற்போது ட்ரெண்டாகி வரும் அரபி குத்து பாடலுக்கு பிரியங்கா போட்ட குத்து டான்ஸ் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
நண்பர்களோடு சேர்ந்து விட்டால் பிரியங்காவின் ஆட்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியாது என்பதை தற்போது நிரூபித்து விட்டார்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா தற்போது முடிவடைந்த பிக்பாஸ் 5வது சீசன் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக மாறிவிட்டார். இதற்கு முன்பு இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன்னுடைய தொகுப்பாளர் திறமையை வெளிக்காட்டி இருந்தாலும், இவருடைய உண்மையான முகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் பலர் அறிந்து கொண்டனர். இவருடைய ஜாலியான கேரக்டர் பிடித்துப் போனதால் தான் இவர் ஒவ்வொரு முறையும் அதிகமான வாக்குகளை பெற்று வந்துள்ளார்.

நண்பர்கள் அதிகம் தான்
எனக்கு எப்போதும் குடும்பத்தினரை விடவும் நண்பர்கள்தான் அதிகம் என்று பிரியங்கா கூறியிருக்கிறார். அதுபோலத்தான் ஒவ்வொரு இடங்களிலும் இவர் பழகும் நபர்களுடன் நண்பர்களாக விரைவில் மாறி இருக்கிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கூட இவருடைய அம்மாவை தொடர்ந்து இவர் இவருடைய நண்பர்களை தான் அதிகமாக மிஸ் பண்ணி வந்துள்ளார். ரசிகர்களின் அன்பின் காரணமாக இவர் பிக் பாஸ் 5 வது சீசனில் ரன்னர் ஆக வெற்றி அடைந்து இருக்கிறார். இவர் வெற்றி அடைந்து திரும்பியதும் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்க தொடங்கியிருக்கிறார்.

கலக்கும் அரபி குத்து
தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து தன்னுடைய பணியை தொடங்கி இருக்கும் பிரியங்கா ஃப்ரியாக இருக்கும் நேரத்தில் பன் பண்ண தவறவில்லை. எப்போதும்போல இவருடைய ஜாலியான கேரக்டரால் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தற்போது லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் அரபி குத்து பாடலுக்கு தன்னுடைய நண்பர்களுடன் இவர் போட்ட ஆட்டம் வேற லெவல் வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் பிரியங்காவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று கூறி வந்தாலும் பிரியங்கா எப்போது திரைப்படங்களில் வலம் வருவார் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வேற லெவல் டான்ஸ்
ஒரு பாடல் ட்ரெண்டிங் ஆகி விட்டாலே சமூக வலைத்தளத்தில் அனைத்து பிரபலங்களும் அந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதற்கு தொடங்கிவடுவார்கள். அந்த வரிசையில் தற்போது பிரியங்காவும் தன்னுடைய இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் பலர் வேற லெவல் என்று கூறி இருந்தாலும், டான்ஸில் பிரியங்காவின் டான்ஸ் எப்போதுமே புதுசு தான் என்று கொஞ்சவும் தவறவில்லை. அதுமட்டுமல்லாமல் இவருடன் ஆடும் மாகாபாவை பார்த்து பலர் கலாய்த்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications