மாஸா..கெத்தா.. கிளம்பிய பிரியங்கா.. இது வேற லெவல் என்டர்டைன்மென்ட் தான்
சென்னை: தற்போது பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலர் என்ஜாய் பண்ணி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு பிரியங்கா தற்போது தன்னுடைய கனவை நோக்கிய என்ஜாய் மென்டை தொடங்கியிருக்கிறார்.

பிரியங்கா கண்டுபிடித்த மாற்று வழி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்த பிறகு பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லையாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் அந்த வீட்டிற்குள் இருந்ததன் தாக்கம் அவருடைய மூளைக்குள் அதிகமாக இடத்தை பிடித்து விட்டதாம். அதனால் அவர் தற்போது அதற்கு மாற்று வழியை கண்டுபிடித்து இருக்கிறார். தன்னுடைய சந்தோஷத்தை மீட்டெடுப்பதற்காக பிரியங்கா செய்திருக்கும் செயலை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ்
விஜய் டிவியில் தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமான பிரியங்கா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தன்னுடைய திறமையை அனைவருக்கும் வெளிக்காட்டி இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கேரக்டரையும் உலகிற்கே வெளிக்காட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்ள போகிறார் என்று சொல்லும்போது ரசிகர்கள் பலர் இந்த முடிவு வேண்டாம் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்து வந்தனர். பிரியங்காவின் பெயர் கெட்டுப் போய்விடும் என்றெல்லாம் பலரும் பயம் ஏற்படுத்தி வந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத பிரியங்கா தைரியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

ஐந்தாவது சீசனின் ரன்னர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே அதிகமாக ஒலிக்கும் குரலாக ப்ரியங்காவின் குரல் இருந்து வந்தது. இவர் ஒரு தொகுப்பாளராக எப்போதுமே கத்திப் பேசி பழகி விட்டதால் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை நடந்தாலும் சரி, ஜாலியான என்ஜாய்மென்ட் நடந்தாலும் சரி அங்கே பிரியங்காவின் குரல் தான் ஹவியாக இருந்து வந்தது. பிக் பாஸ் 5 வது சீசனில் ரன்னர் ஆக வெற்றி பெற்று தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் எந்த அளவிற்கு ரசித்து இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் புரிய வைத்து விட்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான தொகுப்பாளர் பணியை தொடங்கி இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ
என்னதான் பிஸியாக இருந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி முக்கியம் என்பதை உணர்ந்த பிரியங்கா தற்போது பிக்பாஸ் பிரெண்ட்ஸ்களுடன் ஹைதராபாத் கிளம்பியிருக்கிறார். தான் எது செய்தாலும் அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் அப்லோட் செய்துவிடும் பிரியங்கா ஹைதராபாத் செல்லும் வீடியோவையும் விட்டுவைக்காமல் தன்னுடைய யூடியூபில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலர் சிரித்து வயிறு வலிச்சு போச்சு, உண்மையிலே இந்த வீடியோ மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் தான் இருக்கிறது என்று பலர் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் தங்களால் செய்ய முடியாததை பிரியங்கா ஜாலியாக செய்து வருகிறார் என்று அவர்மீது பொறாமை யிலும் கலாய்த்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications