நேசமணி கெட்டப்பில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த பிரியங்கா
சென்னை: பிரியங்காவின் கேரக்டருக்கு தகுந்த நடிப்பு வாய்ப்பையும் தற்போது பிக்பாஸ் கொடுத்திருக்கிறது.
இதை இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று பிரியங்காவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரியங்காவிற்குள் இருக்கும் நகைச்சுவை திறமையால் நேசமணியின் கெட்டப்பில் அசத்திவிட்டார் என அவருடைய ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

காமெடியில் கலக்கல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகளை பார்த்து போரடித்துப் போய் இருந்த ரசிகர்களுக்கு எனர்ஜியை கூட்டும் வகையில் நேற்றைய எபிசோடு கலகலப்பாக இருந்தது. அதிலும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய திறமையை சிறப்பாக வெளிக்காட்டி இருந்தனர். ஒரு சிலர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை உள்வாங்கி அப்படியே மாறிவிட்டனர். அதில் பிரியங்காவும் ஒருவர் இவருக்கு காமெடி எப்போதுமே அத்துப்படி தான் என்பதை இப்போதும் நிரூபித்துவிட்டார்.

கொஞ்சம் குழம்பி விட்டார் போல
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக இருந்த பிரியங்கா ஒரு சில நாட்கள் தன்னுடைய கேரக்டரை மறந்து வீட்டில் குரூப் சேர்த்து கொண்டு விளையாட தொடங்கிவிட்டார். இது இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவருடைய உண்மையான கேரக்டரில் இவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறிக் கொண்டிருந்த நிலையில் பிரியங்காவும் தற்போது தன்னுடைய ரியல் கேரக்டருக்கு மாறிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கலகலப்புக்கு பஞ்சம் இல்லை
எந்த சூழ்நிலையிலும் ஜாலியாகவும், அடுத்தவர்களை சிரிக்க வைக்கவும் ஒரு திறமை வேண்டும். அது எல்லோரிடமும் அமைந்து விடாது, அது பிரியங்காவிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் அவர் இருக்கும் இடமாக இருந்தாலும் சரி,அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஜாலியாக இருந்து வருகிறது. தற்போது இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதும் கூட இதன் ரசிகர்களுக்கு கலகலப்பைக் கூட்டி வருகிறது.

சிரிக்க வைத்த டான்ஸ்
நேற்றைய டாஸ்க்கில் போட்டியாளர்களின் கேரக்டருக்கு தகுந்தது போல பிக்பாஸ் ஒவ்வொரு கேரக்டரையும் கொடுத்து அதுபடிதான் போட்டியாளர்கள் நேற்றைய எபிசோட் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தார். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கெட்டப் வந்து கொண்டிருக்கும்போது பிரியங்காவுக்கு வடிவேலுவின் நேசமணி கெட்டப் கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் அப்படியே கேரக்டராக மாறிவிட்டார். அவருடைய உடல் அசைவு மற்றும் டான்ஸ் அப்படியே வடிவேலுவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எபிசோடில் இவருடைய ஆட்டத்தைப் பார்த்து பலர் வயிறு வலிக்க சிரித்து இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications