நிம்மதி வேணும்.. மணிமேகலைக்கு போட்டியாக பிரியங்கா போட்ட வீடியோ.. அதில் சொன்ன வார்த்தை!
சென்னை: மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று பிரியங்கா தான் சுற்றுலா சென்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மணிமேகலை தான் கடந்த இரண்டு வாரங்களாக சனிக்கிழமைகளில் வீடியோஸ் வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கு போட்டியாக பிரியங்கா நேற்று சனிக்கிழமை வெளியிட்ட வீடியோ youtube-ல் ட்ரெண்டிங்கில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மணிமேகலை சனிக்கிழமை ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். தன்னுடைய வேலையை செய்ய விடாமல் பிரியங்கா தடுக்கிறார். அவர்தான் இந்த சேனலில் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு அவர் பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு பணம், பதவியை விட தன்மானம் முக்கியம் என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும் என்று அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகி விட்டேன் என்று சொல்லி இருந்தார்.

அதைத்தொடர்ந்து மணிமேகலைக்கு ஆதரவாக சிலர் பிரியங்காவை திட்டி வந்தனர். அதே நேரத்தில் விஜய்டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக மணிமேகலை மீது குற்றம் சாட்டி போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அடுத்த வாரமே மணிமேகலை இன்னொரு வீடியோ வெளியிட்டு வந்தார். அப்போது பிரியங்காவின் பர்சனல் பற்றி யாரும் பேசாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்த மணிமேகலை பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்பவர்களை சொம்பு என்று கிண்டல் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மூன்றாவது வாரத்தில் மணிமேகலை என்ன வீடியோ வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அப்போது மணிமேகலை தன்னுடைய காரை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்கள் பற்றி எதுவும் பேசாமல் தன்னுடைய கணவரோடு கார் பற்றி பேசியது தான் அந்த வீடியோ இருந்தது.

மணிமேகலைக்கு போட்டியாக பிரியங்கா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மணிமேகலை தன் மீது குற்றம் சாட்டிய பிறகு பிரியங்கா எந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் பதிவிடாத நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். அதை தொடர்ந்து youtube சேனலிலும் தான் கேரளாவில் உள்ள வர்கலா என்ற இடத்திற்கு குக் வித் கோமாளி பிரபலமான ரக்ஷன், சுனிதா, அக்ஷிதா என மூன்று பேரோடு சென்ற வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வீடியோவில் ஒரு இடத்தில் அவர் கடற்கரையின் அழகை ரசித்தபடி சென்று கொண்டிருக்கிறார். அப்போது இதுவும் கடந்து போகும் என்ற பாடலை பாடியிருக்கிறார். எனக்கு நிம்மதி முக்கியம், நம்மைப் சுற்றி வரும் பிரச்சனைகள் எல்லாம் இதோடு போகட்டும். கடலில் அலை போல நம்மை துரத்தும் விமர்சனங்களும் நம்முடைய மனதை பாதிக்காத வகையில் போகட்டும் என்று பேசி இருக்கிறார்.
அதுபோல இன்னொரு இடத்தில் எனக்கு நிம்மதி வேணும் அதைத்தான் நான் இப்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை நான் தலையில் ஏற்றிக் கொள்வது கிடையாது. இப்போது எனக்கு எதிராக நடப்பதும் இதோடு நிற்கட்டும் என்று தன்னை பற்றி பரவி வரும் செய்திகளுக்கு மறைமுகமாக பதில் கொடுத்திருக்கிறார்.

அதோடு பிரியங்கா எப்போதும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் பேசிக் கொண்டிருப்பது போல அந்த வீடியோவின் ஆரம்பத்தில் தன்னுடைய டிராவல் பேக்கை திறந்து காட்டி இதுதான் என்னுடைய வீடு இந்த வீட்டிற்குள் நான் பயன்படுத்தும் பொருள்கள் எல்லாம் இருக்கிறது என்று தன்னுடைய எல்லா பொருட்களையும் எடுத்துக்காட்டி இருக்கிறார். அதுபோல சுற்றுலா போன இடத்தில் சாப்பிடுவது பிறகு பைக்கில் ரைடிங் போனது என எல்லா இடத்தையும் சுற்றி காட்டி இருக்கிறார். இந்த வீடியோ 14 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications