பிரபலங்களை விடுங்க, மாற்றுத்திறனாளி, முதியோர் 1500 பேருக்கு ஐசரி கணேஷ் சிறப்பான வரவேற்பு.. இப்படி ஒரு ஏற்பாடா?
சென்னை: வேல்ஸ் யுனிவர்சிட்டியின் சேர்மன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தாவின் திருமண புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் நேற்றிலிருந்து டிரண்டாகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய மகளின் திருமண பங்க்ஷனில் அரசியல் மற்றும் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பை ஐசரி கணேஷ் நடத்தி இருக்கிறார்.
ஐசரி கணேஷை தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிந்து இருக்கும். அதிலும் சினிமாவில் மட்டுமல்லாமல் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தலைவர் மற்றும் வேந்தர் வேல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட ஐசரி கணேஷ் சமீபத்தில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான பூஜையை பிரமாண்டமாக போட்டிருந்தார். அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஐசரி கணேஷ் மகள் திருமணம்
ஐசரி கணேஷுக்கு ப்ரீத்தா, குஷ்மிதா என்ற இரண்டு மகள்களும் சர்வேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். அதில் மூத்த மகள் ப்ரீத்தா தான் வேல்ஸ் யுனிவர்சிட்டியோட வைஸ் பிரின்சிபல் ஆக இருக்கிறார். அவருடைய மூத்த மகள்தான் எப்போதுமே ஸ்பெஷல் என்று பல இடங்களில் பேசியிருக்கிறார். பிரீத்தாவும் அவருடைய அப்பாவை போல தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாக பேட்டிகளில் கூறி இருக்கிறார். நேற்று ப்ரீத்தாவிற்கும் தொழிலதிபர் உமாசங்கர் மகன் லஷ்மின்குமார்க்கு நேற்று காலை திருமணத்தை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சிறப்பு வரவேற்பு
இதில் அரசியல், சினிமா ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பல துறைகளை சார்ந்த பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். இந்த திருமணத்தை ஒட்டி யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலையும் ஐசரி கணேஷ் செய்திருக்கிறார் அதாவது திருமணம் காலையில் நடைபெற்ற நிலையில் மாலையில் தன்னுடைய மகள் மற்றும் மருமகனை ஆசீர்வதிப்பதற்காக ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் முதியோர் என 1500 பேருக்கு சிறப்பு திருமண வரவேற்பு நடத்தி வைத்திருக்கிறார்.
நல்ல மனது
இதில் ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்கள் சிறப்பு குழந்தைகளின் நடனமும், இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவருக்கும் பரிசு பொருட்களையும் ஐசரி கணேஷ் வழங்கி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். அதுபோல சோசியல் மீடியா பக்கங்களில் ஐசரி கணேஷ் வீட்டு திருமண புகைப்படங்கள் தான் ட்ரண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இவருடைய திருமணத்தில் தமிழ் சினிமாவில் அதிகமான நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்களை எல்லோரும் பகிர்ந்து வருகிறார்கள். ஐசரி கணேஷ் செய்த செயலை இப்போது பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications