உங்களோட அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் போடவா? ரச்சிதாவை பதிவு வெளியிட்டு மிரட்டிய தயாரிப்பாளர்
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு Fire என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த திரைப்படம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிருப்தியான போஸ்ட் ஒன்று போட்டிருந்தார். அதற்கு ரச்சிதாவை மிரட்டும் தோனியில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் ஜேஎஸ்கே சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் Fire என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்து வந்த பிக் பாஸ் பாலா தான் இந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டதாக சில தினங்களுக்கு முன்பு போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதோடு தனக்கு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சம்பளம் எதுவும் தரவில்லை என்றும் பதிவில் கூறியிருந்தார்.

இதை ரீ போஸ்ட் செய்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி நான் இந்த ஏமாற்று இடத்தில் இருந்து ஏற்கனவே வெளிவந்து விட்டேன். நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். ஆனாலும் பரவாயில்லை எனக்கு துணைக்கு ஒருவர் வந்து விட்டார் என்று அதில் கூறி இருக்கிறார். அதோடு தயாரிப்பாளரை டேக் செய்து நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளராக மற்றும் இயக்குனராக இருக்கலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வேண்டாம். தன் வினை தன்னை சுடும் என்று பதிவில் கூறி இருக்கிறார்.
ஏற்கனவே ரச்சிதா மகாலட்சுமி Fire திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரச்சிதாவின் பிறந்தநாள் அன்று இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ரச்சிதாவின் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். அந்த திரைப்படத்தில் ரக்ஷிதா இவ்வளவு கிளாமராக நடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அதனால்தான் ரச்சிதா இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டாரா என்று இப்போது சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த பதிவுக்கு இந்த திரைப்படத்தின் இயக்குனர் சதீஷ் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் "வணக்கம் ரச்சிதா நீங்க நடிச்சது தான் உங்க பர்த்டேக்கு நாங்கள் வீடியோவாக போட்டு இருக்கிறேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடல. இன்னும் படம் வெளியில வரும்போது நீங்க நடித்த காட்சிகள் எல்லாமே வெளியில வரும். நீங்கள் சம்பளம் வாங்கிகிட்டு தானே நடிச்சிருக்கீங்க, இனாமா நடிச்சு கொடுக்கல.

அதற்கு அக்ரீமெண்ட் என் கையில இருக்கு. நீங்க பணம் வாங்குனதுக்கு ஆதாரமும் என் கையில இருக்கு. அதனால உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க. தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போடுற மாதிரி ஆகிடும். மதுரை வினையும்... பிக் பாஸ் வினையும் தன்னைச் சுடும். Fire திரைப்படத்தில் தாங்கள் நடித்ததை மறந்து விட்டீர்கள்.
அதே படத்தை "Shit" என்று விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அந்த "Shit"இல் நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications