எஸ்ஜே சூர்யா பெரிய துரோகி.. சாப்பிட்டதற்கு 15 லட்சம் பைன் போட்டுட்டாரு! ப்ரொடியூசர் ரமேஷ் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் எஸ்.ஜே சூர்யா பற்றி அவருடன் பல வருடங்களாக பணியாற்றிய ப்ரொடியூசர் டிஆர் ரமேஷ் ஃபிலிம்பீட் தமிழுக்கு பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எஸ்ஜே சூர்யா பற்றி பல குற்றச்சாட்டுகளை ப்ரொடியூசர் டிஆர் ரமேஷ் கூறியிருக்கிறார். தான் எஸ்ஜே சூர்யாவுடன் பல வருடங்களாக வேலை பார்த்தபோது தனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தது, டீ வாங்கி கொடுத்ததற்கெல்லாம் மொத்தமாக 15 லட்சம் பணத்தை பிடுங்கி விட்டார் என்று டி ஆர் ரமேஷ் பேசி இருக்கிறார்.

உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான எஸ்ஜே சூர்யா குஷி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக பிரபலமடைந்தார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களை இயக்கிய வெற்றியும் கண்டு இருந்தார். பிறகு தான் இயக்கும் திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் அவர் பெரிதாக எந்த சர்ச்சைகளிலும் சிக்கியது கிடையாது. ஆனால் சமீபத்தில் அவர் பற்றி பல சர்ச்சைகள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது.

S J Suryah T R Ramesh

ஜின் திரைப்பட இயக்குனர் பேட்டி

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜின் திரைப்பட இயக்குனர் இரண்டு வருடங்களாக ஒரு நடிகரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தேன் அவர் முதலில் என்னிடம் கதையும் கேட்டிருந்தார் உங்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி இருந்தார். என்னிடம் பலமுறை போனில் பேசியிருக்கிறார் ஆனால் எனக்கு படத்திற்கான கால்ஷீட் தராமலேயே அலைக்கழித்துக் கொண்டு இருந்தார். நான் அவரிடம் நேரில் சென்று கதையை சொல்லி கால் சீட் கேட்டபோது என்னை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்திவிட்டார்.

எஸ் ஜே சூர்யா பற்றிய சர்ச்சை

அந்த நடிகருக்காக நான் இரண்டு வருடங்களாக வேற எந்த முயற்சியும் எடுக்காமல் காத்திருந்தேன். அதனால் நான் பெரிய ஏமாற்றம் பெற்றிருந்தேன் இதுபோன்று எந்த நடிகர்களும் இயக்குனர்களை ஏமாற்றாதீர்கள் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த நடிகர் சிவகார்த்திகேயன் அல்லது தனுஷ் தான் என்று சிலர் கமெண்ட் கொடுத்து வந்தனர். ஆனால் பிஸ்மி உள்ளிட்டார் அது அந்த நடிகர் சூர்யா தான் என்று பேசி இருந்தனர். அதற்கு எஸ் ஜே சூர்யா மறுப்பு தெரிவித்து இருந்தார்.

கருத்து வேறுபாடு

இந்த நிலையில் இந்த சர்ச்சையை தொடர்ந்து இப்போது ப்ரொடியூசர் டிஆர் ரமேஷ் பேசிய பேட்டி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டி ஆர் ரமேஷ் 20 வருடங்களுக்கு மேலாக எஸ்.ஜே சூர்யாவிடம் தான் வேலை பார்த்து இருக்கிறார். நடிகர் சிம்பு தான் டி ஆர் ரமேஷை எஸ் ஜே சூர்யாவுக்கு அறிமுகப்படுத்தி அவரிடம் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார். அதற்கு பிறகு பல வருடங்களாக வேலை செய்திருந்தாலும் இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.

20 வருடம் வேலை

இந்த நிலையில் ஃபிலிமிபீட் தமிழுக்கு பிரத்தியேகமாக ரமேஷ் அளித்த பேட்டியில் எஸ்ஜே சூர்யா ஒண்ணா நம்பர் துரோகி என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் டி ஆர் ரமேஷ் பேசும்போது, நீங்க சாப்பாட்டுக்கு யாருக்காவது பைன் போட்டு பாத்திருக்கீங்களா? ஆனால் எஸ்.ஜே சூர்யா எனக்கு பைன் போட்டு இருக்கிறார். நான் 20 வருஷமா எஸ் ஜே சூர்யாவிடம் வேலை பார்த்தேன். அப்போது அவரிடம் சாப்பிட்டதற்காக அவர் எனக்கு பைன் போட்டு இருக்கிறார்.

15 லட்சம் ஃபைல்

நீங்கள் டீ சாப்பிட்டதற்கு, சாப்பாடு சாப்பிட்டதற்கு, நான் வெஜ் சாப்பிட்டதற்கு என்று என்னிடம் 15 லட்சம் ரூபாய் என்னுடைய பைனான்ஸில் பிடித்து விட்டார். தமிழ் சினிமாவில் துரோகி எஸ் ஜே சூர்யா. தமிழ் சினிமாவுக்கு தகுதி இல்லாதவர் எஸ்ஜே சூர்யா இதை யாரும் நம்பவில்லை என்றாலும் எனக்கு கவலை கிடையாது. ஆனால் என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. எஸ் ஜே சூர்யா பற்றி தமிழ் சினிமா நடிகர்களிடம் கேளுங்கள் அவர்கள் உண்மையை சொல்வார்கள். நான் அவரிடம் நெருங்கி பழகி இருக்கிறேன். அவர் எப்போ எப்படி இருப்பார் என்று எல்லாம் எனக்கு தான் தெரியும் என்று அந்த பேட்டியில் டி ஆர் ரமேஷ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+