சின்னத்திரையில் விஜயகாந்த்காக கண்கலங்கிய தயாரிப்பாளர் சிவா.. ஆனால் Goat பற்றி சொன்னது தான் டுவிஸ்ட்
சென்னை: தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான T.சிவா சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் நடிகர் விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் தற்போது பேட்டி ஒன்றில் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் வருவது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். அதோடு கோட் (Goat) திரைப்பட அப்டேட் குறித்தும் பேசி இருக்கிறார்.
சினிமா ரசிகர்களால் இளைய தளபதி என்று கொண்டாடப்படும் விஜய் நடித்த கோட் திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். அதை தொடர்ந்து தன்னுடைய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் நடிகர் விஜய் நடித்து கொண்டிருக்கும் கோட் திரைப்படம் அவருடைய திரை பயணத்தில் கடைசி படம் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பாளரும் கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த சிவா, சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் கோட் திரைப்படம் பற்றியும் நடிகர் விஜயகாந்த் குறித்தும் பேசி இருக்கிறார். அதாவது சிவா விஜயகாந்த் உடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவா கலந்து கொண்டிருந்தார்.

அப்போது விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்திற்கு போயிட்டு நானும் விஜயகாந்த்துடன் காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது மக்கள் எல்லாம் அங்கே இங்கே அழுது கொண்டே ஓடிக்கொண்டிருந்தனர். அதை பார்த்த விஜயகாந்த் செத்தா இப்படி சாகணும்.. பல மக்கள் ஃபீல் பண்ணி அழுகிற அளவிற்கு வாழ்ந்துட்டு போயிட்டாரு மனுஷன் என்று எம்ஜிஆர் பற்றி சொன்னார்.
ஆனால் விஜயகாந்த்துடைய இறப்பும் அதேபோல இருந்தது. அவர் இறந்த அன்று சென்னையே திணறிப் போய் இருந்தது. அந்த அளவிற்கு அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது என்று விஜயகாந்த் குறித்து கண்கலங்கி பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது நடந்த பேட்டியிலும் விஜயகாந்த் குறித்து சிவா பேசி இருக்கிறார். விஜய் ரசிகர்களுக்கு கோட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். அதுபோலத்தான் எனக்கும் இருக்கிறது.

அதோடு என்னுடைய குருநாதர் விஜயகாந்த் விஜயோடு வரும் காட்சிக்காக அந்த ஒரு தருணத்திற்காக நானும் காத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல கோட் திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பெல்லாம் வச்சுக்கிட்டு தியேட்டர் வராதீங்க. அங்க வந்து பார்த்துட்டு ரசிகர்கள் முடிவு பண்ணுவாங்க. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அவருடைய பொறுப்பு என்ன என்பது தெரியும்.
மூன்று மணி நேரம் நம்பி தியேட்டருக்கு வாங்க ஒரு பிரேம் கூட வேஸ்ட்டா இருக்காது. அது வேஸ்ட்னா வெங்கட் பிரபுவே வைக்க மாட்டார். ஏனென்றால் நான் அவரோடு சரோஜா படத்தில் வேலை செய்து இருக்கிறேன். இசையை பொருத்தவரைக்கும் இப்போ அனிருத் மேஜிக்கான ட்ரெண்டிங்கில் இருக்கிறார். சில படங்கள் அனிருத் இசைக்காக மட்டுமே ஓடி இருக்கிறது. அதுபோல கோட் திரைப்படத்தின் செகண்ட் ட்ராக் பாடல் குறித்து பல விமர்சனங்கள் வந்தது உண்மைதான்.

ஆனாலும் இந்த பாடல்கள் கேட்க கேட்க உங்களுக்கு பிடிக்கும். இந்த படம் கதையை நம்பி உள்ள படம். இந்த படத்திற்கு என்ன இசை தேவையோ, எந்த அளவு தேவை என்பதை இயக்குனரும் இசையமைப்பாளர்களும் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். விஜய் சாரின் நகைச்சுவை, ஹீரோயிசம் எல்லாம் உள்ள படமாக இந்த படம் வந்துள்ளது என்று சிவா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications