சொத்துக்கள் கோடிக்கணக்கில்.. சூன்யத்தில் சிக்கிக்கொண்ட நடிகை.. 14 வயதில் இப்படியொரு சம்பவமா: பிரபலம்
சென்னை: வெற்றிடங்கள் நிறைந்த சூன்யத்துக்குள் சிக்கி கொண்டுள்ளார் பிரபல நடிகை கனகா.. தன்னுடைய வீட்டிலேயே அம்மாவின் ஆவி வாழ்வதாக நம்புகிறாரா? அம்மா தன்னுடன் இருப்பதாக நம்புகிறாரா? தெரியவில்லை. ஆனால், வெளிச்சம் இல்லாத வெற்றிடத்தில் சிக்கியுள்ளார்" என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
Aagayam Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப் கனகா பற்றி பேசும்போது, "வேறு மாநிலத்தை சேர்ந்த பிரபலமான சீனியர் நடிகர் அவர்.. ஒருமுறை கேரளா நம்பூதிரி, இன்ன கோத்திரத்தில், இன்ன நேரத்தில், இன்ன ஜாதகத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால், முதலமைச்சர் ஆகலாம் என்று அந்த பெரிய நடிகரிடம் சொன்னாராம்..

பெரிய தொகை
அப்போது தன்னுடைய மகளும், அந்த லக்னத்தில்தான் பிறந்திருப்பதாக கூறி, கனகாவின் ஜாதகம் தரப்பட்டுள்ளது. கனகாவுக்கு அப்போது 14, 15 வயதிருக்கலாம். உடனே அந்த சீனியர் நடிகர், "உன் மகளா?" என்று கேட்டு தயங்கி, பிறகு தாலி மட்டும் கட்டிவிட்டு, பெரிய தொகையை கொடுத்து தாய், மகளை அனுப்பிவிட்டாராம்..
அதற்கு பிறகு, அந்த பெரிய நடிகரும், தன்னுடைய மாநிலத்தில் 3, 4 முறை முதலமைச்சர் ஆகிவிட்டார்..இந்த விஷயம் அப்போது வெளியில் யாருக்கும் தெரியாது.. எப்போதுமே சாங்கியம், ஜோதிடம் இதெல்லாம் நாலு அறைக்குள்ளே நடக்கும் விஷயமாகும்.. ரொம்ப நாள் கழித்துதான், அரசல் புரசலாக கசிந்தது..
அரசல் புரசல் விஷயம்
விவரம் அறியாத வயதில் நடந்த திருமணம் என்றாலும், விவரம் தெரிந்தபிறகு வேறு வேறு பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளானார் கனகா.. வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த வீட்டை சுற்றி எங்கேயும் போவதில்லை.. முன்பெல்லாம் சிடி கேசட்களை வாங்கி சென்று நிறைய சினிமா படங்களை பார்த்து கொண்டிருப்பாராம். அந்த வீட்டில், தன்னுடைய அம்மா ஆவியுடன் அவர் பேசுகிறாரா? அம்மா ஆவி அங்கேயே இருப்பதாக நம்புகிறாரா? அம்மா தன்னுடன்தான் வாழ்வதாக நம்புகிறாரா? தெரியவில்லை.
கனகாவுக்கு கல்யாணம்
கனகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக பலரும் சொல்கிறார்களே தவிர, அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை.. காதலில் விழுந்ததாகவும் தெரியல.. தன்னுடைய அப்பாவை பார்த்து, எந்த ஆண் மீதும் அவருக்கு நல்ல அபிப்பிராயம் வந்ததில்லை..
வட்டத்தை தாண்டி அவர் எங்கேயும் போவதில்லை.. உலகம் தெரியாமலேயே எத்தனையோ பிரபலங்கள் வாழ்ந்து இறந்துள்ளார்கள்.. சில்க் ஸ்மிதாகூட அப்படித்தான்.. அந்த டாக்டர் சொன்னதை மட்டுமே கேட்டுட்டு இருந்தார்.. அதை மீறும்போதுதான், டாக்டரால் கதை முடிக்கப்படுகிறது. கனகாவுக்கும் அப்படித்தான் உலகமே தெரியாது.
வெற்றிடம் - சூன்யம்
நடிகை விஜயசாந்தி, பாலகிருஷ்ணாவை காதலித்தார்.. ஆனால், பாலகிருஷ்ணா அவரை கழட்டிவிட்டுட்டார்.. இதனால் உச்சக்கட்ட விரக்திக்கு விஜயசாந்தி சென்றார்.. இப்படி கல்யாணம் செய்து கொள்ள போவதாக வாக்குறுதியும் தந்து ஏமாற்றும் நடிகர்களும் உண்டு.
கனகாவுக்கு உள்ளுக்குள்ளேயே வெற்றிடம் இருக்கிறது.. வெளிச்சம் இல்லை, அனுசரனை , ஆதரவு தர அவருக்கு யாரும் இல்லை.. இதனால், அந்த வெற்றிடம் அதிகமாகி சூன்யமாகிவிட்டது.. அந்த சூன்யத்துக்குள் சிக்கியிருக்கிறார் கனகா" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications