புதுவை சிறுமி கொலை.. கண்ணீரோடு அறந்தாங்கி நிஷா கேட்ட செருப்படி கேள்வி.. இறுதியில் வைத்த கோரிக்கை
சென்னை: புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய வருத்தங்களையும், கோபங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அறந்தாங்கி நிஷா தன்னுடைய கோபத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார்.
புதுச்சேரியில் ஒன்பது வயது குழந்தைக்கு ஏற்பட்ட உச்சகட்ட கொடுமை குறித்து கண்ணீரோடு அறந்தாங்கி நிஷா அரசாங்கத்திற்கும், காவல்துறை துறையினருக்கும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் இப்போது பலரையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் செய்தி என்றால் புதுச்சேரியில் ஒன்பது வயதான சிறுமி கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தான் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இது குறித்து பலரும் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நயவஞ்சகர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு எல்லாரும் முன்பும் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்.
இதுபோல இனி யாரேனும் யோசிக்கக்கூட முடியாத அளவிற்கு அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இப்போது வெள்ளித்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அறந்தாங்கி நிஷா கண்ணீரோடு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்... இதை சொல்வதற்கு நான் வெட்கத்தோடு சொல்கிறேன்.. வேதனை தான் என் மனது முழுக்க இருக்கிறது. புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நயவஞ்சகர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று எல்லோருமே சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்ன நடக்கப்போகிறது? இதைப் பற்றி ஒரு சில நாட்கள் பேசுவோம்.
அதற்குப் பிறகு அப்படியே எல்லோரும் மறந்து விடுகிறார்கள். ஏற்கனவே தன்னுடைய காதலன் தானே என்று நம்பிப்போன பொள்ளாச்சி பெண்களுக்கு ஏற்பட்ட அவலத்தை எல்லோரும் மறந்து விட்டார்கள். அதுபோல இன்னொரு நாட்டில் இருந்து தன்னுடைய கணவரோடு 27 நாடுகளில் சுற்றிக் கொண்டு வந்த ஒரு பெண் ஏழு நயவஞ்சகர்களால் கற்பழிக்கப்பட்டார். அப்போதும் யாரும் எதுவும் பேசவில்லை...
நாங்க எல்லாம் ஒவ்வொரு நாட்டிற்கும் போகும்போது எங்க நாட்டினுடைய பெருமை அது இதுவென்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இனி எந்த மூஞ்சை வைத்து வெளிநாட்டில் நாங்கள் எங்கள் நாட்டின் பெருமை என்று பேசுவது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புதுச்சேரியில் அந்த சிறுமியின் தந்தை அங்கிருந்து காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சினார்... என்னுடைய குழந்தைக்கு நடந்தது போல இனி எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது, அந்த நயவஞ்சர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
போலீஸ்காரரின் காலில் விழுந்தது அந்த தந்தை மட்டும் அல்ல ஒட்டுமொத்த சமுதாயமும் தான். இதற்காக அரசாங்கமும் சட்டமும் என்ன சொல்லப்போகிறது? தயவுசெய்து கெஞ்சி கேட்கிறோம் இந்த மாதிரி நயவஞ்சகர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் அறந்தாங்கி நிஷா வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications