புகழ் கொடுத்த புது சர்ப்ரைஸ்...இதை எதிர்பார்க்காத ரசிகர்கள்
சென்னை: புகழ் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோஸ் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளத்தில் புகழ் செய்த செயல் தற்போது பிரபலங்கள் பலருடைய வாழ்த்துக்களையும் அள்ளி வருகிறது.

மிமிக்ரியில் அசத்தல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான புகழ், தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கிறார். புகழ் அல்லது அவரை சிரிப்புடா புகழ் என்று செல்லமாக ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு இவர் முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய மிமிக்கிரி திறமையால் நன்றாக அறிமுகப்படுத்தப்பட்டவர். ஆரம்பத்தில் பெண் கெட்டப்பில் தன்னுடைய திறமையை காட்டி கொண்டிருந்தவர். அதற்குப் பிறகு அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது.

மூன்றாவது சீசனில் புகழின் வருகை
தற்போது 3வது சீசன் தொடங்கி இருக்கும் நேரத்தில் இந்த சீசனில் புகழ் கலந்து கொள்ளவில்லை என்பது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் வேதனையான விஷயமாகத்தான் இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களிலும் புகழ் ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய காமெடி திறமையால் நன்றாக பதிந்து விட்டார். ரசிகர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களையும் இவர் கவர்ந்து வந்துள்ளார். அதனால்தான் தற்போது 3வது சீசனில் புகழ் இல்லை என்பது பலருக்கும் ஏக்கமாக இருந்து வருகிறது. ரசிகர்களின் குறையை தீர்ப்பதற்காகவே இவர் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெள்ளித்திரையிலும் அசத்தல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தங்களுடைய வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது போல, புகழுக்கும் புகழ் கிடைத்துள்ளது. இவர் தற்போது சந்தானத்துடன் இணைந்து சபாபதி திரைப்படத்தை நடித்து முடித்திருக்கிறார். அதற்குப்பிறகு அஜித்துடன் வலிமை திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இவருக்கு பல வெள்ளித்திரை திரைப்படங்களும் வாய்ப்பு வந்த வண்ணமாகவே இருக்கிறது. இதனால் தற்போது பிசியாக இருந்து வருகிறார்.

யார் அந்த பொண்ணு
என்னதான் இவர் திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அடிக்கடி சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டு வரும் இவர் ஹாப்பி பர்த்டே பார்ட்னர்.. லவ் யூ என்று ஒரு பெண்ணோடு இவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்ததும் சிவாங்கி ஹாப்பி பர்த்டே அக்கா என்று வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு பல ரசிகர்கள் இது அக்கா இல்லை உங்களுடைய அண்ணி என்று சிவாங்கிக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரசிகர்கள் பலர் இது யார் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு பலரும் இதுதான் புகழுடைய லைஃப் பார்ட்னர் என்று பதில் அளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications