Flashback: அனுபவிக்க மாட்டேனு சொல்லிட்டு அனுபவிக்காமலே போய்ட்டான்! சத்யா! புலியூர் சரோஜா கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களை ஆட வைத்த புலியூர் சரோஜாவின் கணவர் ஜி.சீனிவாசன் இறந்துள்ள நிலையில் இவர்களது ஒரே மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்ததால் பிரமை பிடித்தது போல் இருந்தாராம் புலியூர் சரோஜா! அவரை தேற்றியது விஜயகாந்த்தான் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடனம் சொல்லி தந்தவர் புலியூர் சரோஜா. இவரது பயிற்சியில் நடனமாடாதவர்களே இருக்க மாட்டார்கள் என சொல்லும் அளவுக்கு புலியூர் சரோஜா பேமஸ். யாருக்கு எந்த மாதிரியான ஸ்டெப் வருமோ அவர்களுக்கு அந்த மாதிரியான ஸ்டெப்களை சொல்லித் தருவதில் வல்லவர்.

television g srinivasan

எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த லதா, மஞ்சுளா உள்ளிட்டோருக்கு முக பாவனைக்கான பயிற்சியையும் புலியூர் சரோஜாதான் கொடுத்து வந்தார். "சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா" பாடலில் ரஜினியை ஆட வைத்தார். அந்த beat-க்கு ஏற்ப ரஜினியின் துள்ளல் நடனம் இன்றும் ரசிக்க வைக்கிறது.

அது போல் "இளமை இதோ இதோ" பாடலில் கமல்ஹாசனையும் ஆட வைத்தார். அந்த பாடல்தான் இன்று ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் போது ஒலிக்கப்படுகிறது. 40 ஆண்டுகளாக சினிமாவில் நடனம் சொல்லிக் கொடுத்த புலியூர் சரோஜா, நடிகர் ஜி.சீனிவாசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சத்யநாராயணன் என்ற மகன் இருந்தார். இவரது மரணம் புலியூர் சரோஜாவை மிகவும் புரட்டி போட்டுவிட்டது. தனது ஒரே மகன் மீது உயிரையே வைத்திருந்தார். ஒரு முறை தஞ்சாவூரில் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது தனது நண்பனுடன் ரோட்டோர கடையில் நின்று இளநீர் குடித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த வழியாக வேகமாக போன பேருந்து ஒன்று, சத்யா மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மகன் இறந்துவிட்டார் என்ற தகவலை புலியூர் சரோஜாவிடம் சொன்ன போது அவர் பிரமை பிடித்தவர் போல் ஆகிவிட்டாராம். புலியூர் சரோஜாவை தனது தாய் போல் பார்த்துக் கொண்டது விஜயகாந்த்தான் என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

புலியூர் சரோஜா அளித்த பேட்டிகளில், "எனது மகன் எப்போதுமே எங்கள் சொத்துகளை அனுபவிக்க மாட்டேன் என அடிக்கடி சொல்லி வந்தான். கடைசியில் அது போலவே ஆகிவிட்டது. இது போன்ற புத்திர சோகம் எந்த தாய்க்கும் வரக் கூடாது.

பிறகு எங்கள் மகன் இறப்பால், நான் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் தானம் செய்யுறதா எழுதி வைத்துவிட்டேன். என் கணவரும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. எங்கள் மகன் சத்யா நினைவாக ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். அதில் குறைந்த கட்டணத்தில் ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறோம்" என புலியூர் சரோஜா தெரிவித்துள்ளார்.

இப்படி ஏற்கெனவே புலியூர் சரோஜாவின் வாழ்வில் இத்தனை சோகம் இருந்த நிலையில் நேற்றைய தினம் அவருடைய கணவரும் நடிகருமான ஜி.சீனிவாசன் காலமாகிவிட்டார். தனது கணவரின் உடலை பார்த்து சரோஜா கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+