“சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்” பாடல் தருணை ஞாபகம் இருக்கா? இப்படி மாறிவிட்டாரே!
சென்னை : நடிகர் தருண் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்தார். அதோடு புன்னகை தேசம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் பல வருடங்களாக இவர் சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக ஆகும் பல நடிகர் நடிகைகள் கதாநாயகன்களாக அல்லது கதாநாயகியாக வெற்றி பெற்றார்களா என்று பார்த்தால் அதில் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் ஒரு சிலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் தருண். தருண் கதாநாயகன் ஆவதற்கு முன்பே அளவில் இப்ப வரைக்கும் பேசப்படும் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார்.

தருண் கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்து புகழ் வாங்கி இருந்தார் .அதிலும் தமிழில் இவர் நடித்த "எனக்கு 20 உனக்கு18" புன்னகை தேசம், காதல் சுகமானது போன்ற சில திரைப்படங்கள் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதற்குப் பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

தருணை அவருடைய பெற்றோர்கள் எப்படியாவது நடிகராக வேண்டும் என்று தான் குழந்தையாக இருக்கும்போதே பல ஆடிசனுக்கு கூட்டிட்டு போயிருக்கின்றனர். தருணின் அப்பா ஒடிசா சீரிஸ் இயக்குனராக இருந்திருக்கிறார். இதுபோல தருணின் அம்மாவும் தெலுங்கில் முன்னணி நடிகையாக தான் இருந்திருக்கிறார். இதனாலேயே தன்னுடைய மகனை நடிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் பல முயற்சிகள் எடுத்திருக்கின்றனர்.

அந்த நேரத்தில் தான் மணிரத்தினம் தருணின் புகைப்படத்தை பார்த்து அஞ்சலி திரைப்படத்தில் அஞ்சலியின் அண்ணனாக நடிக்க வைத்திருக்கிறார். முதல் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இவருக்கு பல விருதுகளை வாங்கிக் கொடுத்திருந்தது. தமிழில் மட்டும் அல்லாமல் குழந்தை நட்சத்திரமாக அந்த நேரத்தில் தெலுங்கிலும் தருண் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் கதாநாயகனாக இவர் நடிக்க தொடங்கிய பிறகு தான் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் 90களின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றான சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் என்ற பாடலில் தருண் உடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் பல ரசிகைகளை கவர்ந்தது. அதுபோல குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே தருண் சின்னத்திரையில் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார்.

இவர் நடிகராக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் கிரிக்கெட்டராக இப்ப வரைக்கும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார். செலபிரிட்டி கிரிக்கெட்டில் இவர் இப்ப வரைக்கும் விளையாடி கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இவர் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் அதிகமான வித்தியாசமாக இருக்கிறது.

உடல் எடை கூடி இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் இது தருணா என்று ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
