புஷ்பா 2: ஓடிடி உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.. அதுவும் இத்தனை கோடியா? அடேங்கப்பா
சென்னை: தெலுங்கு சினிமாவில் மாஸான படங்களை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து மூன்று வருடங்களுக்கு பிறகு புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கி இருக்கிறது? அதுவும் எத்தனை கோடி என்று பார்க்கலாம்.
ஆந்திராவில் நடைபெறும் சட்டவிரோத செம்மரக்கட்டை கடத்தலை செய்யும் கும்பல் பற்றிய கதைதான் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த திரைப்படத்தில் தினக்கூலிகள் போல் ஏழை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள்? அவர்களை பிடிக்க போலீசார் எப்படி எல்லாம் முயற்சி செய்கிறார்கள்?

லஞ்சம் வாங்கிக் கொண்டு எப்படி அவர்களை விடுகிறார்கள், செம்மரக்கட்டை கடத்தலில் உள்ள ரிஸ்க் என்ன? அதற்கு பின்னால் இருக்கும் பெரிய தலைகள் யார் யார் அதை சுற்றி நடக்கும் அரசியல் என எல்லாவற்றையும் இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
அல்லு அர்ஜுனின் அசால்ட்டான நடிப்பு ராஷ்மிகாவின் கவர்ச்சி, அதோடு அல்லு அர்ஜுன் சண்டை காட்சிகள் என்று மக்களை ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் புஷ்பா திரைப்படம் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தையும் அதிக செலவில்
உருவாக்கப்பட்டு இருந்தது.

புஷ்பா 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பிரமோஷனில் அல்லு அர்ஜுன் பேசியது பலரையும் கவர்ந்தது. அதிலும் எந்த இடத்தில் நாம இருக்கிறோமோ அந்த மொழியில் பேச வேண்டும் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசியதை பலரும் கொண்டாடி வந்தனர்.

அதுபோல டிக்கெட் முன்பதிவே 100 கோடியை இப்படம் வசூல் செய்தது. புஷ்பா படத்தில் முதல் பாகத்தில் இறுதியில் வந்த பகத் பாசில் புஷ்பா 2 வில் படம் முழுக்க வருகிறார். அவருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் அல்லு அர்ஜுன் பேசும் வசனங்கள், தாறுமாறு காட்சிகள் ட்ரைலரில் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த திரைப்படம் பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடியில் பார்ப்பதற்காக எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதுவும் இந்த திரைப்படத்திற்காக 275 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.இது இதுவரைக்கும் எந்த டாப் நடிகர்களின் படங்களுக்கும் கிடைக்காத தொகையாக இருக்கிறது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமே அதிகபட்சமாக 175 கோடிக்கு ஒடிடி நிறுவனங்களிடம் விற்பனையானது. அதை விடவும் இப்போது புஷ்பா 2 விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications