சேட்டுங்ககிட்ட காசு ஏன் இருக்குனு தெரியுமா? அனிதாவை வைத்து கொண்டே கலாய்த்த புஷ்பவனம் குப்புசாமி
சென்னை: மார்வாடிகள் என சொல்லப்படும் சமூகத்தினரிடம் காசு ஏன் இருக்கிறது என்பதற்கான சீக்ரெட்டை நான் சொல்கிறேன் என அதே சமூகத்தை சேர்ந்த மனைவி அனிதாவை வைத்துக் கொண்டே புஷ்பவனம் குப்புசாமி கலகலப்பாக சொன்ன ஒரு விஷயத்தை பார்க்கலாம்.
புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நாட்டுப்புற பாடகர். இவர் தனது மனைவி அனிதாவுடன் இணைந்து நிறைய நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார். சினிமாவில் சில படங்களில் பாடியுள்ளார்.

இவர் சன் டிவி, விஜய் டிவி, மக்கள் டிவி உள்ளிட்ட சேனல்களில் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக குப்புசாமி இருந்த போது அங்கே முதுகலை படிக்க வந்தவர்தான் அனிதா.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அனிதா. கொள்ளை கூட்டத்தினரின் தாக்குதல்களால் இடம் பெயர்ந்து பெங்களூருக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்றனர். அனிதா மேட்டுப்பாளையத்தில் படித்தார். கோவையில் அவினாசிலிங்கம் கல்லூரியில் பிஏ இசை படித்திருந்தார்.
அந்த கல்லூரியில் தனியாக இசை படித்த ஒரே மாணவி அவர்தான். அது போல் குப்புசாமியும் புஷ்பவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு இளங்கலை பட்டத்தை தஞ்சையில் படித்தார். இவர்கள் இருவருமே சென்னை பல்கலைக்கழகத்தில் இசை பயின்ற போதுதான் சந்தித்துக் கொண்டனர்.
அதாவது இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்காக போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது குப்புசாமியை ஒரு பாடல் பாடுமாறு அவருடைய துறைத் தலைவர் தெரிவித்தாராம். அப்போதுதான் தஞ்சாவூர் மண்ணெடுத்து தாலி ஒன்னு என்ற பாடலை பாடினாராம்.
இந்த பாடல் மொழி தெரியாதவர்கள் கூட ரசித்து ஒன்ஸ்மோர் கேட்க வைத்தது. அப்போதுதான் அவர் முதல்முறையாக அனிதாவையும் பார்த்துள்ளார். ஒரு முறை குப்புசாமி, அனிதாவிடம் போய் "நான் உங்களை காதலிக்கிறேன்" என சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அனிதா, அங்கே இருந்த சொம்பு ஒன்றை தூக்கி குப்புசாமியின் மூஞ்சிலேயே எறிந்தாராம்.
பிறகு பல்வேறு தருணங்களில் அனிதா, குப்புசாமியின் காதலை உணர்ந்துள்ளார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் 1992 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். அனிதா மார்வாடி பெண் ஆவார்.
இப்படி இசையால் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி இருவரும் இசைக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறார்கள். இந்த நிலையில் அனிதா குறித்து குப்புசாமி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த சேட்டுங்கிட்ட காசு ஏன் இருக்குதுங்கிறதுக்கு ஒரு விஷயத்தை சொல்றேன். நாங்கள் அம்பாசிடர் காரில் கும்பகோணத்தில் மாமியார் வீட்டிற்கு சென்றோம்.
அப்போது போகும் போது பழம் வாங்க நினைத்தோம். அனிதா, ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம் உள்ளிட்டவை போதும் என்றார். நான்தான் மாமியார் வீட்டுக்கு செல்கிறோம், தர்பூசணி பழம் வாங்கிச் செல்வோம் என நினைத்து அதை வாங்கிக் கொண்டு போனோம்.
பிறகு காலையில் தர்பூசணியை வெட்டி எல்லோரும் சாப்பிட்டனர். மதிய உணவுக்காக நாங்கள் சாப்பிட்ட போது ஒரு வித்தியாசமான உணவை பரிமாறினார் என் மாமியார். அது கூட்டு போல் இருந்தது. ஆனால் ருசியாக இருந்தது. "இது என்னங்க" என கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே உள்ளே போய்விட்டார்.
ஆனால் அது என்னவென தெரிந்து கொள்ள எனக்கு ஆசையாக இருந்தது. உடனே என் மனைவியிடம் சொல்லி கேட்க சொன்னேன். அவர் உள்ளே போய் அவர் அம்மாவிடம் கேட்டுவிட்டு வந்து என்னிடம் சொன்ன போது எனக்கு அப்படியே ஷாக்காகிவிட்டது. நான் வாங்கி வந்த தர்பூசணி பழத்தின் தோலை தூக்கி போடாமல் அதில் ஒரு கூட்டு செய்தார்களாம். நாமாக இருந்தால் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அவர்கள் தூக்கி எறியாமல் அதிலும் ஒரு கூட்டை செய்தார்கள் என குப்புசாமி கலகலப்பாக சொல்ல அனிதா சிரித்துக் கொண்டே இருந்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications