டாக்சிக் கேர்ள் பிரண்டா? - மாதம்பட்டி ரங்கராஜனைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டாவையும் கலாய்த்த குரேஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் சில நாட்களாகவே பெரிய விவாதப் பொருளாக இருப்பவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன். ஒருபக்கம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய சர்ச்சைகள், இன்னொரு பக்கம் அதை வைத்து வரும் நகைச்சுவையான வீடியோக்கள் என இணையமே பரபரப்பாக இருக்கிறது.

Qureshi Mathampatti Rangarajan Cook with Comali

மாதம்பட்டி ரங்கராஜன் சர்ச்சை

மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், தனது முதல் மனைவியைப் பிரியாமலேயே, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்ததுதான் பெரும் சர்ச்சையாக மாறியது.

இந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் ஜாய், சமீபத்தில் ஒரு பேட்டியில், "என்னுடைய கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி மாதம்பட்டி ரங்கராஜன் வற்புறுத்தினார்" என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு ரங்கராஜனைப் பற்றிப் பல அதிர்ச்சிகரமான தகவல்களைப் பேட்டிகளில் வெளியிட்டு வருகிறார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜன் இதுவரை இந்த சர்ச்சைகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார்.

குரேஷிக்கு நிகர் அவரே

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் குரேஷி. இவருடைய தனித்துவமான நகைச்சுவை உணர்வுக்கும், பிரபலங்களின் உடல்மொழிகளைப் பங்கம் செய்யும் திறமைக்கும் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில், ஜாய் கிரிசில்டா வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜனின் காதல் ரொமான்ஸ் வீடியோவை, அப்படியே குரேஷி ஒரு வீடியோவில் பங்கம் செய்து வெளியிட்டார். அந்த வீடியோ பயங்கரமாக வைரலானது.

அதற்குப் பிறகு, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் உமைர் கூட, மாதம்பட்டி ஸ்டைலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இப்படி, ஒரு புது டிரெண்டை உருவாக்கி, சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார் குரேஷி.

குரேஷி கொடுத்த பதிலடியா

இந்த நிலையில், குரேஷி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜனைப் பங்கம் செய்தது போல, தற்போது 'Toxic girlfriend song' என்ற கேப்சன் போட்டு ஒரு பாட்டைப் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. "குரேஷி இந்த முறை ஜாய் கிரிசில்டாவைப் பங்கம் பண்ணுகின்றாரா?" என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மொத்தத்தில், ஒருபுறம் மாதம்பட்டி ரங்கராஜன் தனது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளால் மௌனம் காத்து வரும் நிலையில், மற்றொருபுறம் குரேஷி, தான் வெளியிடும் ஒவ்வொரு வீடியோ மூலமும், இந்த விவகாரத்தை ஒரு நகைச்சுவைப் பொருளாக மாற்றி, பரபரப்பைக் கூட்டி வருகிறார் என்றே சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+