அழகு ராணியாக ரச்சிதா... அசந்து போன ரசிகர்கள்... அப்போ இனி சீரியல்??
சென்னை: இளவரசியின் கெட்டப்பில் பட்டையை கிளப்பி இருக்கும் ரச்சிதாவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தம் அடைந்தாலும் இனி சீரியலில் தொடர்வாரா? இல்லையா? என்றுதான் பலர் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.
தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் கன்னட திரைப்படத்திலும் காலடி எடுத்து வைத்திருக்கும் ரச்சிதாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக புல்லட்டில் பறந்து வந்த பைங்கிளி இப்போ பாவாடை தாவணியில் இளவரசியாக வலம் வருகிறது.

அழகு கொஞ்சம் தூக்கல் தான்
சிவப்பு வண்ணத்தில் பட்டுத்துணி சரசரக்க கலக்கலா இளவரசியின் கெட்டப்பில் மாறியிருக்கும் ரச்சிதாவை பார்த்து அசந்து போன ரசிகர்கள் 'வாவ்' சொல்ல தவறவில்லை. இப்படியே எத்தனை முறை வேணும்னாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சிலர் கண்ணிமைக்க கூட மறந்து போயி பார்த்த வண்ணமே இருக்கிறார்களாம். ஆனாலும் இது எதற்காக எடுத்த போட்டோக்கள் என்று தெரியாமல் திணறி இருந்த ரசிகர்கள் ரச்சிதாவின் கேப்ஷனை பார்த்ததும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கின்றனர். காரணம் இவர் சீரியலில் இருந்து தற்போது திரைப்படத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

கன்னடத்திலும் காலடி வச்சாச்சு
அதுவும் கன்னட திரைப்படமான ரங்கநாயக் என்னும் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கப் போவதற்காக வாழ்த்துக்களை சொல்லவா??இல்லை இனி சீரியலில் தொடர்வாரா என்று கேட்கவா என்றே யோசித்தவாறே பலர் இருக்கின்றனர். இவர்களில் சிலர் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என தைரியமாக இனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று குழப்பத்துடனே கேட்டு வருகின்றனர். ஆனால் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்காவிட்டாலும் சூட்டிங்கில் பிஸியாக இருப்பது மட்டும் அனைவருக்கும் தெரிகிறது. இளவரசியின் கெட்டப்பில் இவர் அப்படியே அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் சிரித்த முகமாக இவர் இருக்கும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது என்று பார்ப்பவர்கள் எல்லாம் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த மூக்குத்தியும் இவருக்கு கம்பீரத்தை கொடுத்திருக்கிறது.

ரச்சிதாவின் அடையாளம் மீனாட்சி
விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரே சீரியல் பல சீசன்களில் வந்து கதாநாயகி ஒருவரே தொடர்ந்து கொண்டிருந்தது சரவணன் மீனாட்சி சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த சீரியலில் மீனாட்சி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர்இ தற்போது மீண்டும் அதே விஜய் டிவியில் மகாவாகவே வாழ்ந்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலை போல நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கலகலப்பாக இருந்தாலும் இந்த சீரியலில் இவருக்கு அதிகமாக முக்கியத்துவம் தரப்படவில்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் பீல் பண்ணி தான் வருகின்றனர். அதனாலேயே இவர் திரைப்படத்துக்கு சென்றுவிட்டார் என்று சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.

ஒரு ரவுண்டு வரலாமா
தற்போது ஒரு சில நாட்களாக இவர் இன்ஸ்டாகிராமில் புல்லட்டில் கெத்தாக சுற்றி திறியும் போட்டோஸ்களை பதிவிட்டிருந்தார். இந்த போட்டோவை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டிருந்தனர். அதுவும் டுபு..டுபு..என்று ரோட்டில் புல்லட்டில் பறந்த இவரைப் பார்த்து அனைவருமே கொஞ்சம் மிரண்டு போய் விட்டார்கள். நடிகை என்றால் நடிப்பு மட்டும்தான் தெரிந்து இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள் எங்களுக்கும் பல வித்தைகளை கையில் வைத்து இருக்கிறது என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து பலர் பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் ராணி கெட்டப்பில் பட்டைய கிளப்பி கொண்டிருப்பதை பார்த்ததும் பவ்யமான குடும்ப குத்து விளக்கு போல இருக்கிறாரே என்று பலர் மைண்ட் வாய்ஸ் என்று மறந்து போய் கமெண்ட் களில் கொட்டி விட்டனர்.

ஒரே பாச மழை தான்
ரச்சிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்து அவருடைய ரசிகர்கள் உங்களுக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக்களை மழைபோல குவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் அன்பே என்று தங்களுடைய பாசங்களையும் நிரூபிக்கிறார்கள். இன்னும் சிலர் மனமார்ந்த வாழ்த்துக்கள். .. ரச்சும்மா .. ராக்கிங் டார்லிங் எப்போதும் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் பாசத்தைப் பிழிந்து என்று உச்சுக் கொட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவருக்கு அன்புத் தம்பிகளின் படைபலன்களும் பெருகிக் கொண்டிருக்கிறது. அதிகமான கமெண்ட்களில் வாழ்த்துக்கள் அக்கா என்றுதான் பகிர்ந்து இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications