கமல் சொன்னது பொய்!? பிக் பாஸ் போய்ட்டு வந்துட்டா “அது” நடந்துடுமா? மேடையில் பகீர் கேள்வி கேட்ட ரச்சிதா
சென்னை: சின்னத்திரை நடிகையான ரச்சிதா தான் புதியதாக நடிக்கும் திரைப்பட பூஜையில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அங்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்களுடைய வாழ்க்கை மாறி இருக்கிறதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரச்சிதா யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு எதுவுமே கிடைக்கல. என்னுடைய திறமையின் மூலமாகத்தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறதே தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் எனக்கு எந்த வாய்ப்பும் ஸ்பெஷல் ஆக வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது கமல் குறித்தும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறாரே அது பொய்யா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரச்சிதா ஒரு பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்து பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது எக்ஸ்ட்ரீம் எனும் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.
போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த ரச்சிதா தான் என்னுடைய அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்றும் அதோடு கண்டதையெல்லாம் வைரல் ஆக்குவதை விட இதை வைரல் ஆக்குங்கள் என்றும் கூறியிருந்தார். அதை தொடர்ந்து நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை அவருடைய படத்திற்கான பூஜை வேலைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற போது அதில் ரச்சிதாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? என்று கேட்ட கேள்விக்கு, அதற்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் நம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு பெரிய தளம்.
அதில் நம் திறமையை பார்த்து மக்கள் நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை பார்த்து இயக்குனர்கள் பட வாய்ப்பு வழங்குவார்கள். திறமையை பார்த்துதான் வாய்ப்பு வரும் பிக்பாஸுக்கு போனாலே வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. இதுவரை என்னுடைய சீரியல்கள் மூலம்தான் எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதோடு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வாழ்க்கை மாறிவிடும் என்று சொல்கிறாரே, அது பொய்யா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எப்போதுமே இந்த பிக்பாஸால் உங்களுக்கு வாய்ப்பு வரும் என்று சொல்லவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுடைய திறமையை பார்த்து உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல எல்லோருக்கும் உண்மையான திறமை வெளியே வரும் போது தான் வாய்ப்பு கிடைக்கிறது என்று அந்த பேட்டியில் ரச்சிதா பேசியிருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications