ரச்சிதா மகாலட்சுமியை விடுங்க.. ஜூ வேலைய காட்டாதீங்க.. எகிறிய தினேஷ்.. சின்னத்திரை சங்கத்திலும் மோதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடன இயக்குனர்கள் சங்கத்தில், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது.. உட்பூசலால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது..
நிர்வாகிகள் குறித்து, சின்னத்திரை நடிகர் தினேஷ் செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கினார். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் தினேஷ்.. சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதாவை திருமணம் செய்தவர்.. இப்போது கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவருமே பிரிந்துள்ளனர்..

பிக்பாஸ் சீசன் 7
இதற்கு பிறகு நடிகர் தினேஷ், பிபிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.. இதற்கு பிறகுதான் அவரின் பிரபலம் பட்டிதொட்டி எங்கும் பரவியது.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை கிளப்பியவர்களில் தினேஷூம் ஒருவர்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகும் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த பிரச்சினையால் சோசியல் மீடியாவில் பிஸியாகவே இருந்தார்..
இவர் சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் இருப்பவர்.. தற்போது சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக, தீர்மானம் நிறைவேற்றுவதில் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் இன்று நடந்துள்ளது..
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், "சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழுவில் மோதல் வெடித்துள்ளது.. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.. கடந்த வருடங்களாகவே புகார்களும், சர்ச்சைகளும் வெடித்துள்ளது.. ஒவ்வொரு முறையும் புகார்கள் வெடித்தால், அதுகுறித்து சட்டப்படி போராடியே தீர்வு கண்டு வருகிறோம்..
நிர்வாகத்தை கலைக்கக்கூடாதுஆர்கே செல்வமணி இருந்தபோதும்சரி, தேர்தல் தேதி அறிவித்தபோதும்சரி, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை செய்தார்கள்.. எனினும் நல்லமுறையாக தேர்தல் முடியும்வரை உடனிருந்து, முழு ஒத்துழைப்பு தந்தோம்.. பிறகு தற்போதுள்ள இந்த அணி வெற்றி பெற்றது..
குறைந்தது 3 வருடத்துக்கு நிர்வாகத்தை கலைக்கக்கூடாது என்று நாங்கள் அனைவருமே முடிவெடுத்து விட்டோம். எனவே நிர்வாகத்தை கலைக்கும் எண்ணம் எங்களிடம் கிடையாது. ஆனால், விதிமுறைகளை அளவுக்கு அதிகமாக மீறுகிறார்கள்.. கற்பகவள்ளி, சங்கீதா பாலன் என்ற இந்த 2 பேருக்கும் சில பிரச்சனைகள் உள்ளது.. இவர்களை சமாதானப்படுத்தவே, சங்கத்துக்கு 3 வருடம் ஓடிவிடுகிறது.. மற்றபடி சஙக உறுப்பினர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.. எந்தவிதமான வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவில்லை..
எந்த செயல்திட்டமும் இல்லை
ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மருத்துவ திட்டத்தை மீண்டும் கொண்டுவரவில்லைமெடிக்கல் கார்டு மூலமாக சிகிச்சை பெற்ற ஸ்ரீதர் என்பவருக்கு, தவறான சிகிச்சையால் ஒரு கண்ணே பறிபோய்விட்டது... அது சம்பந்தமான கடிதம் தந்தாலும் நடவடிக்கையும் இல்லை,, நிவாரணமும் இதுவரை இல்லை.
இப்படி இன்னும் பல குறைபாடுகள் இங்கே நிலவுகிறது.. இந்த சங்கமானது தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்யப்பட்டது. அப்படியானால் தொழில் ரீதியான விஷயத்துக்குதானே சங்கம் செயல்படுகிறது? ஆனால், இதுவரை யாருக்குமே வேலைவாய்ப்புக்காக எதையும் செய்து தரவில்லை..
பேச அனுமதிப்பதில்லை
தொழில் ரீதியாக பிக்பாஸ் வீட்டுக்கு 3 மாதம் சென்றால், அந்த மாத மாதமும் செயற்குழுவிலிருந்து என்னை நீக்குகிறார்கள்.. ரவி வர்மா, எம்டி மோகன், போன்றோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.. அதற்கு விளக்கம் தர முயன்றால் அனுமதிப்பதும் கிடையாது.. சங்கத்தின் மூலம் பலன்கள் எதுவும் இல்லை.. சங்கத்துக்கான வருமானமும் இல்லை, சங்கத்துக்கான வளர்ச்சியும் இல்லை. நிர்வாகத்தில் நான் பொறுப்பில் இருந்தாலும், என் கருத்தை பதிவுசெய்ய அனுமதி இல்லை.
ஜனகனமண போடறாங்க
எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டு, ஜூ வேலையை செய்கிறார்கள்.. ஒவ்வொரு பொதுக்குழுவிலும் நாங்கள் 10 நிமிடம்தான் பேச டைம் கேட்போம்.. மைக்கை ஆஃப் பண்ணிட்டு ஜனகனமண போட்டுவிடறாங்க..
அனைவரின் ஒப்புதலும் இல்லாமல் இவர்களே தீர்மானத்தை இயற்றி கொள்கிறார்கள்" என்றெல்லாம் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். ஏற்கனவே நடன இயக்குனர் சங்கத்தில் சர்ச்சைகளும், போராட்டமும் நடந்து வரும்நிலையில், சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் உள்பூசல் வெடித்திருப்பது, பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications