ரச்சிதா மகாலட்சுமியா இது? சின்னத்திரையின் சரோஜாதேவி.. அருமையான நடிகை! பரபரத்த Fire: பிரபலம் பாராட்டு
சென்னை: சின்னத்திரை சரோஜாதேவி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ரச்சிதா மகாலட்சுமி.. சரோஜாதேவி மாதிரியான தோற்றம், சரோஜாதேவி மாதிரியான குரல், கூர்மையான பார்வை கொண்டவர்.. நிமிடத்துக்கு ஒருமுறை முகபாவனைகள் மாற்றக்கூடிய அற்புதமான ஆற்றல் படைத்தவர்" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பாராட்டியிருக்கிறார்.
கர்நாடகாவை சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி, காலேஜ் முடித்துவிட்டு, சின்ன சின்ன டிவி ஷோக்களை பெங்களூரில் செய்து கொண்டிருந்தார்.. பிறகு, 2010ல், விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமானார்.. இதையடுத்து, அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று பிஸியான நடிகையானார். இதில், சரவணன் மீனாட்சி சீரியல், ரச்சிதாவை தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது.

பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல்களை தேர்ந்தெடுத்து ரச்சிதா நடித்து வந்ததால், அவருக்கென ரசிகர்களும் அதிக அளவில் பெருகி கொண்டே போனார்கள்.. பின்னர், சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும், சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக தினேஷை விட்டு பிரிந்தார்.
உப்பு கருவாடு: ஏற்கனவே, உப்பு கருவாடு உள்ளிட்ட சில படங்களில் ரச்சிதா நடித்திருந்தாலும், தற்போது அவர் நடித்திருக்கும் Fire படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில், பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாகவும், சாக்ஷி அகர்வால், சாந்தினி, உள்ளிட்டோருடன், ரச்சிதாவும் நடித்திருக்கிறார்.. அதிலும் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஒரு பாட்டில், எல்லைமீறின கிளாமரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இந்த Fire படத்தை பற்றி மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளார்.. Gem Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான், "காமம், கோபம், இறைவழிபாடு ஆகிய இடங்களில் fire இருக்கும்.. அதேபோலவே இந்த படத்திலும் காமம், கோபம், இறைவழிபாடு மூன்றுமே இருக்கிறது. மூன்று தன்மைகளும் அடங்கிய படம் fire
நாகர்கோவில் காசி: நாகர்கோவில் காசி என்ற இளைஞன், பலபெண்களை சூறையாடி, இப்போது நீதிமன்ற வழக்கை சந்தித்து சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.. அந்த காசியை போன்றவன் இந்த படத்தின் கதாநாயகன். பெண்களின் மென்மையை புரிந்துகொண்டு, அவர்களுடைய பலவீனத்தை தட்டி வசியப்படுத்தி, ரச்சிதா, சாந்தினி, காயத்ரி, சாக்ஷி ஆகிய
பெண்களையும் சூறையாடுகிறார் கதாநாயகன் பாலாஜி முருகதாஸ்.
இதற்கு நடுவில் ஒரு கொலையும் நடக்கிறது. இதிலிருந்து எப்படி இந்த பெண்கள் விடுபடுகிறார்கள்? எப்படி ஹீரோவை தண்டனைக்குரியவராக ஆக்குகிறார்கள் என்பதுதான் கதை.
சரோஜாதேவி: சின்னத்திரை சரோஜாதேவி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ரச்சிதா மகாலட்சுமி.. சரோஜாதேவி மாதிரியான தோற்றம், சரோஜாதேவி மாதிரியான குரல், கூர்மையான பார்வை கொண்டவர்.. நிமிடத்துக்கு ஒருமுறை முகபாவனைகளை மாற்றக்கூடிய அற்புதமான ஆற்றல் படைத்தவர்..

இந்த டிவி சரோஜாதேவி, Fire படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரசிகர்களை கிளுகிளுப்பாக்குகிறார்.. உசுப்பேத்துகிறார். ரச்சிதாவின் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்ததுமே மெய்மறந்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு கிளுகிளுப்பும், கவர்ச்சியும், தாராளமாக வசீகரிக்கும் விதத்தில் காட்டியிருக்கிறார்.
பாராட்டு: ரச்சிதா வாழ்க்கையிலும் விவாகரத்தானவர்.. கணவன் போக்கு சரியில்லாமல், தற்போதுதான் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார். அவர் நடித்த எல்லா டிவி சீரியல்களுமே, சூப்பர் ஹிட்.. நானும் அவருடன் சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தேன். மிக அருமையான நடிப்புத்திறன் கொண்டவர் ரச்சிதா மகாலட்சுமி" என்று பாராட்டியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.












Click it and Unblock the Notifications