"எச்சி டம்ளர்”இது கேவலமாக இல்லையா? ராபர்ட் விஷயத்தில் முடிவை கூறிய ரட்சிதாவின் கணவர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதாவின் கணவர் ராபர்ட் மாஸ்டரின் செயலை பார்த்து காண்டாகி அவரைக் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு ரியாலிட்டி ஷோவில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ராபர்ட் மாஸ்டர் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வது குறித்து கொஞ்சம் கூட அறிவில்லையா? இங்கிதம் இல்லாமல் இப்படியா? நடந்து கொள்வார்கள் என தினேஷ் ராபட்டை திட்டி இருக்கிறார்.
ரட்சிதா உடன் சின்ன ஒரு பிரச்சனையின் காரணமாக பிரிந்து இருக்கும் நிலையில், ராபர்ட் செய்யும் செயல்கள் முகசூழிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. ரட்சிதாவுக்கு குடும்பம் இருப்பது அவருக்கு தெரியுமா? இல்லையா? என்று ரட்சிதாவின் கணவரான தினேஷ் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ரொம்ப பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதா மகாலட்சுமியிடம் சக போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம் நல்ல முறையில் இல்லை என்றும் ரட்சிதாவின் பெயரை கெடுக்கும் விதமாக ராபர்ட் மாஸ்டர் கலந்து கொள்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பமான ஒரு சில நாட்களிலேயே ரட்சிதா தான் என்னுடைய கிரஷ் அவளுக்காக தான் நான் சீரியலையே பார்த்தேன். எனக்கு பெண் தோழிகள் யாரும் கிடையாது. அதனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என்னோடு தொடர்வீர்களா? என்று கேள்வியை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

வியப்பாக இருக்கிறது
ராபர்ட் மாஸ்டரின் கேள்வியால் ரட்சிதா மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரும், ரசிகர்களும் அதிக அளவில் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் அநாகரிகமாக நடந்து நடந்து கொண்டிருக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ரட்சிதாவின் கணவரான தினேஷ் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்..அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர் .அதில் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் ஒருவரால் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியுமா? என்று எனக்கே வியப்பாக இருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்வது பார்க்கும்போது அப்படித்தான் இருக்கிறது.

இந்த அறிவு கூட இல்லையா
ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயல்கள் எனக்கு காமெடியாக தான் இருந்தது. எங்களுக்கும் ஒரு சில நடிகைகளை பிடிக்கும் அதனால் அவர்கள் முன்பு நான் உங்கள் ரசிகன் உங்களோடு என்னுடைய வாழ்க்கை பயணம் தொடருமா? என்று கேள்வியை கேட்க முடியுமா ?அப்படி நாம் செய்ய மாட்டோம். ஆனால் பேசிக் அறிவு கூட இல்லாமல் ராபர்ட் எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு இவருக்கு யாரோ தப்பாக வழிகாட்டி அனுப்பி இருக்கின்றனர். அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இவர் ஆகவே யோசித்து விளையாடி வருகிறார் என நினைக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

குடும்பமே பார்க்குது
எனக்கு ரட்சிதாவை பற்றி நன்றாகவே தெரியும். அவர் இந்த ஒரு பாப்புலரான இடத்திற்கு வருவதற்கு சமுதாயத்தில் எவ்வளவு கஷ்டங்களை தாண்டி, எத்தனை பிரச்சனைகளையும் தாண்டி வந்து இருக்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ரசிகர்களின் மத்தியில் பாப்புலரான இருக்கும் நிலையில் ரட்சிதாவிடம் இவர் இப்படி நடந்து கொள்வது அவருடைய வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும் என்பது யோசிக்காமல் இவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ரட்சிதாவிடம் இவர் நடந்து கொள்ளும் விதத்தை நான் மட்டுமல்லாமல் என்னுடைய குடும்பமும் ,ரட்சிதாவின் குடும்பமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தனக்கு ரட்சிதாவின் மீது அதிகமான உரிமை இருப்பதாக எடுத்துக் கொள்வது பார்க்கும்போதே வெறுப்பாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

தினேஷின் இறுதியான முடிவு
நேற்றைய எபிசோடில் ஒரு டம்ளரில் ராபர்ட் மாஸ்டர் ஜூஸை எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்போது அங்கே இருக்கும் ரட்சிதாவிடமும் டம்ளரை கொடுக்கிறார். முதலில் ரட்சிதா தனக்கு மட்டும்தான் இவர் ஏதோ ஸ்பெஷல் ஆக செய்கிறார் என்று வேண்டாம் என சொல்கிறார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் உனக்கு மட்டும் இல்லை, எல்லோருக்கும் கொடுத்தாச்சி நீ நம்பி குடி என்று சொன்னதும், இந்த இடத்தில் பிரச்சனை வேண்டாம் என்று ரட்சிதாகவும் குடிக்கிறார். உடனே நீ எந்த பக்கம் குடித்தாய் என்று சொல்லு நான் அங்கேயே குடிக்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் கடுப்பான ரட்சிதா அதை துடைத்துவிட்டு அதற்கு பிறகு கொடுக்கிறார். இப்படி ஒரு எச்சத்தனமான வேலையை யாராவது செய்ய முடியுமா? இந்த மாதிரி இவர் செய்து கொண்டிருப்பதால் இவரை வெளியேற்றுவதற்கு ரெட் கார்டு கொடுப்பதற்கு என்ன வேலையை செய்ய வேண்டுமோ, அதைத்தான் நான் இனி செய்யப் போகிறேன். இதுதான் என்னுடைய முடிவு என்று திட்டவட்டமாக தினேஷ் கூறி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரட்சிதா தினேஷோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றும் ராபர்ட் மாஸ்டரால் இப்படி பிரச்சனை வந்தால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கலாம் என்றும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications