பிக் பாஸ் மற்றும் bully gangக்கு கண்டனம் தெரிவித்த ரச்சிதா.. தினேஷ் வைத்து போட்ட பிளானுக்கு பதிலடி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருக்கும் சில போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் குறித்து நடிகை ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தன்னைப் பற்றி சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருப்பது தவறு என்றும் அதே நேரத்தில் அதை டிஆர்பிக்காக வெளிக்காட்டிக் கொண்டிருப்பது மோசமான செயல் என்று ரச்சிதா கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷை டார்கெட் செய்ய வேண்டும் என்றால் அவருடைய மனைவி குறித்து பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இப்போது சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி இணையத்திலும் அதிகமாக பேசப்பட்டும் வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் செய்யும் செயல் பலரையும் கடுப்பாக வைத்திருக்கிறது.
அந்த வகையில் நடிகை ரச்சிதாவும் தன்னுடைய கண்டனத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் அதாவது நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாக இருக்கிறார். ரச்சிதாவிற்கும் தினேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் விளையாடும் விளையாட்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒரு சிலர் அதாவது மாயா, பூர்ணிமா, ஐசு போன்றோர் தினேஷோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதாவது நேற்று நீதிமன்ற டாஸ்க் நடைபெற்றது. அப்போது தினேஷ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ஆண்களுக்கு அவமரியாதையாக நடக்கிறார்கள்.

நிக்சன் வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் போது மாஸ்க் கேட்டதுக்கு உள்ளாடையை எடுத்துக் கொடுத்து கிண்டல் செய்கின்றனர் என்று பூர்ணிமா மற்றும் மாயா மீது வழக்கு தொடர்ந்தார்.அதில் தான் வெற்றியும் பெற்றிருந்தார். இதனால் கடுப்பான மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் தினேஷை டார்கெட் செய்ய வேண்டும், அவனை ஏதாவது பண்ண வேண்டும் என்று இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதற்கு மாயா அவனுடைய மனைவி ரச்சிதா தானே என்று சொன்னதும் பூர்ணிமா அதை வைத்து என்ன பண்றது என்று கேட்கிறார். உடனே மாயா அதை பத்தி கேட்டு அவரை பேச வைக்கணும் என்று சொல்கிறார். அதற்கு பூர்ணிமா சரி ஓகே எனக்கு புரிந்து விட்டது என்று சொல்லி சிரிக்கிறார்.
மேலும் தினேஷை நாம டம்மியா வச்சுக்கணும். தினேஷ் எப்போதும் நம்ம சைடு தான் இருக்கணும். சண்டை போட்டாலும் அவன் நமக்காக நின்னு பேசி சண்டை போடணும் என்றெல்லாம் இருவரும் மோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு தினேஷிடம் நைசாக பேசி அவருக்கும் அவருடைய மனைவிக்கும் என்ன சண்டை என்பதை அவரை கேமரா முன்பு பேச வைக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரச்சிதா தினேஷ் இருவரும் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் பேசியது குறித்து ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.

அதில் என்னுடைய அன்பை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னுடைய பர்சனல் லைஃப் பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் பேச அங்கே யாருக்கும் ரைட்ஸ் இல்ல. அதோட யாருக்கும் தகுதியும் இல்லை. எப்பவுமே அனுபவச்சவங்களுக்கு தான் கஷ்டம் தெரியும். என்னுடைய பெயரை பயன்படுத்தி யாரும் விளையாட வேண்டாம்.
உனக்காக விளையாட என்னோட பர்சனல் இஸ்யூ உங்கள மாதிரி மக்களுக்கு சாதாரணமாக தெரியுதா? அதோடு பிக் பாஸ் குழுவினர் இந்த மாதிரி என்னை பற்றி பேசுவதை சிலர் பேசிக் கொண்டிருக்கும்போது எச்சரிக்கை செய்வது நல்லது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்.
நான் ஏற்கனவே பட்ட பாடு போதும். என்னை சீண்டி ரசிக்காதீங்க. நாங்கள் பிரபலங்கள் என்று அழைக்கப்படுவதால் எங்கள் தனிப்பட்ட விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. வாழுங்கள் வாழ விடுங்கள் என்று ரச்சிதா கூறி இருக்கிறார். அதோடு ஒருத்தவங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பயன்படுத்துவதை ஒளிபரப்புவதும் தவறுதான். இது சரியல்ல என்று புல்ஸி கும்பலுக்கு குத்துவிடுவது போன்று ஒரு இமேஜையும் ரச்சிதா பகிர்ந்து இருக்கிறார்கள். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications