ராதிகா பேசியது தவறு..! விஷால் செருப்பால் அடிக்கணும்னு சொன்ன காரணம் இதுதான்! ராதாரவி ஓபன்
சென்னை: நடிகர் ராதாரவி கடந்த வாரத்தில் நடிகர் விஷால் அட்ஜஸ்டமென்ட் கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொன்னது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு ராதிகா தொடர்ச்சியாக பேசி வருவது குறித்து தன்னுடைய கருத்தை ராதாரவி தெரிவித்து இருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள சினிமா உலகில் பெண் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழ் நடிகைகளும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு மலையாளத்தில் மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை எல்லா சினிமா உலகிலும் நடக்கிறது என்றும் பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தான் விஷால் தன்னுடைய பிறந்தநாளில் இது பற்றி கேள்வி கேட்கையில் விளக்கம் கொடுத்திருந்தார். அப்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று யாராவது அட்ஜஸ்மென்ட் கேட்கிறார்கள் என்றால் அவர்களை செருப்பை கழட்டி அடியுங்கள். அதற்குப் பிறகு கம்ப்ளைன்ட் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.
இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. ஏற்கனவே சில நடிகைகள் பாடகிகள் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியே சொல்லும்போது அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் விஷால் சொன்னது போல செருப்பை கழட்டி அடித்தால் அந்த நடிகைகளுக்கு பாதுகாப்பு யார் கொடுப்பது? என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். அப்போது நடிகை ராதிகா சில youtubers நடிகைகளை தவறாக ஆபாசமாக பேசுகிறார்கள், அவர்களை விஷால் செருப்பை கழட்டி அடிக்கட்டும். நான் விளக்குமாறு எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இது அதிகமான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இது குறித்து நடிகராகவும், நடிகை ராதிகாவின் அண்ணனுமான ராதாரவி BBT cinema என்ற youtube சேனலில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் ராதிகா விஷால் பற்றி பேசியது தவறு. இந்த நேரத்தில் நடிகைகள் இதுபோல பேசிக் கொண்டிருப்பது எனக்கு சரியாக படல.

உண்மையில் யாருக்கேனும் பிரச்சனைகள் நடந்தால் அது முறையான விசாரணை நடைபெற்று இறுதியில் தெரியவரும் ஆனால் அதற்கு முன்பு கருத்து தெரிவிப்பது தவறு. விஷால் இப்போது நடிகர் சங்கத்தில் செயலாளராக இருக்கிறார். நாசர் தலைவராக இருக்கிறார். என்னை எதிர்த்து தான் விஷால் போட்டியிட்டார் அவர் ஜெயித்துவிட்டார் என்பதற்காக நான் அவர் மீது கோபப்பட கூடாது. போட்டி என்பது வேறு நிஜ வாழ்க்கை என்பது வேறு.
நடிகர் சங்கத்தை விட்டு என்னையும் சரத்குமாரையும் வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள். அதற்காக நாங்கள் நடிக்காமல் இருக்கிறோமா? இப்ப வரைக்கும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள் என்று அவர்கள் மீது கோபத்தில் நாங்கள் என்ன வேணாலும் பேசலாம் என்று இல்லை. விஷால் செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என்று சொன்னது ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் விஷால் சொன்ன விதம் தான் தவறாக இருந்ததே தவிர அவர் கோபம் நியாயமானது தான். ஆனாலும் ஒரு பதவியில் இருக்கிறோம் என்றால் அதற்கு பொறுப்பாக பேச வேண்டிய கடமையும் இருக்கிறது. பதவியில் இருக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் இதுபோன்று வரத்தான் செய்யும். அதற்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் பேசி விட முடியாது என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசி இருக்கிறார்.













Click it and Unblock the Notifications