வரலட்சுமி குடும்பம் எங்களுக்கு அவ்ளோ செஞ்சிருக்காங்க.. அப்பா வருத்தப்படுறாரு! நடிகை ராதிகா மகள் ஆதங்கம்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் சரத்குமாரின் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் என்னுடைய அம்மா தான் என்றும் கூறியிருக்கிறார்.
நடிகர் சரத்குமார் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் பயணத்தை தொடங்கி இப்ப வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பல அவதாரங்கள் எடுத்திருக்கும் சரத்குமார் சாயா என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

விவாகரத்து
அவருக்கு நடிகை வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிறகு சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதேபோல ராதிகாவிற்கு ஏற்கனவே ரேயான் என்ற ஒரு மகள் இருக்கிறார்.
அடிக்கடி பங்க்ஷன்
ராதிகாவின் மகள் ரேயான் திருமணத்தை நடிகர் சரத்குமார் தான் முன் நின்று நடத்திய வைத்திருந்தார். அதுபோல சரத்குமாரின் மகளான வரலட்சுமியின் திருமணத்தை ராதிகா முன் நின்று நடத்தி இருந்தார். வரலட்சுமி திருமணத்திற்கு பிறகு சரத்குமாரின் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் இரண்டாவது மனைவி ராதிகா குடும்பம் எல்லோரும் ஒரே வீட்டில் அடிக்கடி பங்க்ஷன் கொண்டாடி வருகிறார்கள்.

குடும்ப ஒற்றுமை
அதுபோல திடீர் சுற்றுலாக்களும் சென்று வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் வீடியோஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் வரலட்சுமி ராதிகாவை தன்னுடைய அம்மா என்று சொல்ல முடியாது ஏனென்றால் அவங்க அம்மா இடத்திற்கு எப்போதுமே வர முடியாது என்று பேசிய பேட்டிகள் எல்லாம் வைரலான நிலையில் இப்போது இவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்வது குறித்து பலரும் வியந்து வருகிறார்கள்.
தவறான தகவல்கள்
இந்த நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய குடும்பத்தை பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நாங்க எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணமே என்னுடைய அம்மா தான் ஆனாலும் அவர்களைப் பற்றி சில வதந்திகளும் தவறான தகவல்களும் பரவி வருகிறது.
சரத்குமார் வருத்தம்
அப்படி செய்திகள் பரவும் போது நான் அதற்கு எதிராக பதிலடி கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறேன். அம்மா சரி விடு இதெல்லாம் பெரிய விஷயமா ஆக்காத என்று சொல்லுவாங்க. அதே நேரத்தில் அம்மாவும் சில நேரங்களில் கோபமாகி தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாங்க. அப்போ அப்பா உங்க ரெண்டு பேரையும் வச்சிக்கிட்டு என்னால முடியலடா இவ்வளவு கோபக்காரங்களா இருக்கீங்களே என்று சொல்லுவாரு.
வரலட்சுமி தான் அக்கா
வரலட்சுமி என்னுடைய சொந்த சகோதரி தான். எங்கள் இருவருக்கும் எப்போதுமே பிரச்சனைகள் வந்தது கிடையாது. நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக நன்றாகவே பழகுகிறோம். இது சிலருக்கு வியப்பை கொடுக்கிறது. சிலருக்கு பொறாமையை கொடுக்கிறது. ஆனால் எங்களுடைய குடும்பத்தில் பிரச்சனை என்றும், எங்கள் குடும்ப பிரச்சனைக்கு காரணம் அம்மா என்றும் சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

குடும்பத்திற்கு சப்போர்ட்
இந்த குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்கு அம்மா தான் முக்கிய காரணம். வரலட்சுமி என்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. என்னுடைய அம்மா பற்றி மட்டுமல்ல என்னுடைய அப்பா, அக்கா வரலட்சுமி பற்றி யார் தப்பா பேசினாலும் நான் திருப்பி அடிப்பேன் என்று ராதிகாவின் மகள் ரேயான் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications