மகளுக்காக “கமல்ஹாசன்” செய்த செயல், ஆடி போயிட்டேன்.. தேவயானி மகளும் சளைத்தவங்க இல்ல! ராதிகா உருக்கம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் பல போராட்டங்களும் சிக்கல்களும் இருக்கும் நிலையில், லைஃப் இசை வெளியீட்டு விழாவில் தன் மகளை பார்த்து கமல்ஹாசன் செய்த செயல் குறித்தும், நடிகை தேவயானியின் மகள் பாடிய பாடலை பற்றியும் நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய குழந்தைகள் மேலும் மேலும் உயர்வாக செல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். சில நாட்களுக்கு முன்புதான் பள்ளி திறந்தது. தன்னுடைய குழந்தைகள் பள்ளி படிப்பை சிறப்பாக தொடங்க வேண்டும் என்பதற்காக பல பெற்றோர்கள் தங்களுடைய வேலையையும், சாப்பாட்டையும் கூட பொருட்படுத்தாமல் பள்ளிவாசலில் காத்திருந்தோர் ஏராளம்.

மகிழ்ச்சி பெரியது
பள்ளிக்கு முதல் நாள் குழந்தையை அனுப்பி வைக்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் அவ்வளவு வருத்தத்தோடும், சந்தோஷத்தோடும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல குழந்தைகள் ஒவ்வொரு விதத்திலும் தங்கள் முன்பு ஜெயிக்கும் போதும், மற்றவர்களை வியப்பு ஏற்படுத்தும் போதும் பெற்றவர்களை போல சந்தோஷப்படுபவர்கள் யாரேனும் உண்டா? என்றால் சந்தேகம் தான்.
பெற்றோரின் சந்தோஷம்
அதுபோல குழந்தைகள் திறமையை பார்த்து ஒவ்வொரு கணமும் எல்லா பெற்றோரும் பிரமித்து பூரித்து கொண்டிருப்பது போல தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனும் அவருடைய மகள் பாடிய பாடலை கேட்டு சந்தோஷத்தில் லயத்து போய் இருந்தார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான "தக் லைஃப்" திரைப்படம் தியேட்டரில் வெளியாவதில் பல்வேறு பிரச்சனைகள் புதியது புதியதாக முளைத்துக் கொண்டிருக்கிறது.
ஸ்ருதிஹாசன் பாடிய தக் லைஃப் பாடல்
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசிய வார்த்தைகள் தான் இப்போது அடுத்தடுத்து பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு முன்பு தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் ஸ்ருதிஹாசன் தக் லைஃப் திரைப்படத்தில் இடம் பெற்ற "விண்வெளி நாயகா" என்ற பாடலை பாடியிருந்தார். அதைக் கேட்டபோது தன்னுடைய மகள் திறமையை பார்த்து தான் மிகவும் சந்தோஷப்படுவதாகவும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
ராதிகா சரத்குமார் பதிவு
இந்த வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு நடிகை தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் தன்னுடைய மகளையும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள வைத்திருந்தார். தன்னுடைய மகளுக்கு பாடல் திறமை இருக்கும் நிலையில் அவர் தன்னுடைய திறமையால் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்ததாக தேவயானி கூறி இருந்தார்.

கமல்ஹாசன் பற்றி ராதிகா சரத்குமார்
தேவயானி மகள் இனியா பாடிய பாடல் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேவயானி மகள் பாடிய பாடலையும் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் பாடிய பாடலையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ராதிகா சரத்குமார், "சினிமா துறையில் மக்கள் Nepotismபற்றி மிகவும் விமர்சன ரீதியாக பேசுகிறார்கள். இந்த திறமைசாலிகளை பாருங்க. அவர்களின் பெற்றோரின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, பெருமையை பாருங்கள். உங்களை யாராலும் ஆதரிக்க முடியாது. ஒருவரின் உழைப்பு, மன உறுதி, வலிமை மற்றும் விடாமுயற்சி மட்டுமே ஒவ்வொருவரையும் ஜெயிக்க வைக்கும்.
தேவயானி மகள் பாடிய பாடல்
கமல் சாரின் கண்களில் மகள் ஸ்ருதி பாடும்போது இருந்த பெருமை என்னுடைய இதயத்தை தொட்டது. அதுபோல தேவயானி அவருடைய மகள் இனியாவின் பாடலுக்கு நடுவர்கள் பாராட்டியதை கேட்டு அவருடைய முகத்திலும் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது. எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக பெருமையாகவும், லட்சியமாகவும் இருக்கிறார்கள். ஆனால் நான் பணிபுரியும் சினிமா துறையில் இந்த திறமையும் பெருமையும் என்னை நெகிழ வைத்த ஒரு பிம்பமாக இருந்தது" என்று ராதிகா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications