பாக்யராஜ் இறுதி அஞ்சலியில் நடந்த சம்பவம்.. கையெடுத்து கும்பிட்ட ராதிகா.. உருக்கமான வேண்டுகோள்
சென்னை: இயக்குநரும் நடிகருமான திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் காலை நடைப்பயிற்சியை முடித்து வீட்டிற்கு வந்த அவர், திடீரென நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து அவரது இல்லத்தில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அங்கு நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆம்புலன்ஸை சுற்றி வளைத்த கூட்டம்
பாக்யராஜின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் அவரது இல்லத்தை வந்தடைந்தபோது, வீடியோ எடுக்க வேண்டும் என்ற ஆவலில் வாகனத்தை சுற்றி நின்றதாக கூறப்படுகிறது. அந்த நெரிசல் காரணமாக குடும்பத்தினரும், திரைப்பிரபலங்களும் கூட சரியாக இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கையெடுத்து கும்பிட்ட ராதிகா
அந்த நேரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் ஆம்புலன்ஸில் இருந்து இறங்குவதற்கு முன்பே கைகளை கூப்பி அனைவரிடமும் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.
"உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்... சினிமா எங்க தொழில். உங்களுக்கு டிராமா வேணும்... டிஆர்பி வேணும்னா நாங்க நடிச்சு கொடுக்கிறோம். ஆனா மனுஷங்க உயிர் வேற... தயவு செய்து எங்களுக்கு கொஞ்சம் பிரைவசி கொடுங்க..." என்று அவர் கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவரது குரலில் இருந்த வேதனையும், முகத்தில் தெரிந்த சோகமும் பலரது மனதை உருக்கியுள்ளது.
ஒரு குடும்பத்தின் துயரம்
பாக்யராஜின் மறைவால் குடும்பத்தினர் ஏற்கனவே துயரத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் கூட சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு குடும்பம் தங்களது அன்புக்குரியவரை இழந்து துயரத்தில் இருக்கும் நேரத்தில், அவர்களுக்குத் தேவையான தனிமையையும் மரியாதையையும் வழங்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
சமூக வலைதளங்களில் ராதிகாவுக்கு ஆதரவு
ராதிகாவின் இந்த வேண்டுகோள் வெளியானதும் சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். "அவர் சொன்னது நூறு சதவீதம் சரி", துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினரின் தனிமையை மதிப்பது இன்னொரு விஷயம்", "ஒரு நல்ல கலைஞரை இழந்த வேதனையில் இருக்கும் குடும்பத்திற்கு கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டும்" என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மீண்டும் எழுந்த பிரைவசி விவாதம்
திரையுலகில் ஒவ்வொரு முறையும் பிரபலங்கள் மறைவின்போது இதுபோன்ற கூட்ட நெரிசல் மற்றும் அளவுக்கு மீறிய வீடியோ பதிவு குறித்து விமர்சனங்கள் எழுவது வழக்கமாகிவிட்டது.
பாக்யராஜின் இறுதி அஞ்சலியிலும் அதே நிலை ஏற்பட்ட நிலையில், ராதிகா கையெடுத்து கும்பிட்டு வைத்த வேண்டுகோள், "துக்க நிகழ்வுகளிலும் மனிதநேயம் முதலில் இருக்க வேண்டும்" என்ற விவாதத்தை மீண்டும் சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.













Click it and Unblock the Notifications