Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுவன் கேட்ட ஒரே கேள்வி.. 10 லட்சம் மதிப்பில் ராகவா லாரன்ஸ் செய்த செயல்.. ஒரு கிராமமே இப்போ ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், டான்ஸ் மாஸ்டர் ஆகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் கேட்டதற்காக ஒரு கிராமத்திற்கு 10 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை திறந்து வைத்திருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பல வருடங்களாகவே பலதரப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சின்னதாக தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகள் செய்து வந்த லாரன்ஸ் பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் படிக்க வைத்து பெரிய பதவியில் அமர வைத்திருக்கிறார்.

Raghava Lawrence Super Singer 10 10

உதவும் வள்ளல்

அதுபோல தாய் தந்தை இல்லாத குழந்தைகள், விவசாயிகள், கவனிக்க ஆள் இல்லாத வயதானவர்கள் போன்ற பலருக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் விஷ்ணு என்ற சிறுவனுக்காக அவருடைய ஊருக்கே உதவி செய்து இருக்கிறார்.

தாகம் தீர்த்த லாரன்ஸ்

இந்த செயல் சமூக வலைத்தளத்தில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. சிறந்த நடிகர் என்பதை விடவும் லாரன்ஸ் மாஸ்டர் மனிதநேயமிக்கவர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்று பலரும் அவரை புகழ்ந்து வருகிறார்கள். சூப்பர் சிங்கர் விஷ்ணுவின் சொந்த ஊரில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை என்பதால் பல கிலோமீட்டர் சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டி இருக்கிறது என்று ராகவா லாரன்ஸ் இடம் கோரிக்கை வைத்திருந்தார்.

நன்றி தெரிவித்த ஊர் மக்கள்

இதனால் அந்த ஊருக்கு 10 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ராகவா லாரன்ஸ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதனால் கிராம மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கின்றனர். அதற்குப் பிறகு லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

விஜயகாந்த் போல யாரும் இல்லை

அதில் நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் போல யாராலும் வர முடியவில்லை என்று ஒரு பேச்சு இருக்கிறதே அதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, விஜயகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இங்கு யாருடைய இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. விஜயகாந்த் ஒருவர்தான் அவரைப் போல இன்னொருவர் பிறந்து வர முடியாது என்று கூறியிருந்தார்.

அது அடுத்தவர்கள் விருப்பம்

அதுபோல நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள், உங்களைப் போல இப்போது கே பி ஒய் பாலாவும் பலருக்கும் உதவி செய்கிறார். ஆனால் உங்களை எல்லாம் விடவும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு சிலர் யாருக்கும் எந்த உதவிகளையும் செய்ய மனசு வரலையே அதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். நமக்கு என்ன தோணுகிறதோ அதை செய்துவிட்டு போய்விட வேண்டும். அடுத்தவர்கள் அதை ஏன் செய்யல? இதை ஏன் செய்யல? என்று நாம கேட்கக்கூடாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல இல்ல லாரன்ஸ் மாஸ்டருக்காக அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டான்ஸ் ஆடி வரவேற்பு கொடுத்திருந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+