Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரைசா ரைசா.. கிழிஞ்சிருக்கே ஜீன்ஸ் பேன்ட் ஒரு சைசா.. கலாய்க்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய ரைசா இணையதளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நல்லாயிருந்த ஜீன்ஸை கிழிச்சி அவர் போட்டிருக்கும் போட்டோஸ் களும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது 3 சீசன் களை கடந்திருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான்.

இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாக்களில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசா வும் ஒருவர்.

மிஸ் செளத் இந்தியா பட்டம்

மிஸ் செளத் இந்தியா பட்டம்

ரைசா 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் செளத்தில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார் .2017 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலமாக காஜலுக்கு உதவியாக உதவியாளராக நடித்து இருந்தார். தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் சீனா குறித்தும் குறித்தும் சில ட்வீட்களை செய்திருந்தார்.

ரசிகர்களுக்கு எனர்ஜி

ரசிகர்களுக்கு எனர்ஜி

இது இவரது ரசிகர்களுக்கு புது எனர்ஜி ஆக இருந்தது. அவரை பின்பற்றும் ரசிகர்கள் அவரை போலவே கமெண்டுகளை போட்டிருந்தார்கள் .இது இணைய தளங்களில் வைரலாக பரவிக் கொண்டுதான் இருந்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பிறகு பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஹரீஷ் கல்யாண்

ஹரீஷ் கல்யாண்

பிக்பாஸ் வீட்டில் இவருடன் இருந்த ஹரிஷ் கல்யாண் உடன் பியர் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றியை பெற்றது என்றாலும் அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சியான் மகன் துருவ் உடன் ஆதித்ய வர்மா படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தில் இயக்குனர் தரப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்தப் படத்தை கிடப்பில் போட்டு விட்டு வேறு ஒரு இயக்குனர் மற்றும் ஹீரோயினுடன் எடுத்து ரிலீஸ் செய்தார்கள்.

ரசிக்கும் போட்டோஸ்

ரசிக்கும் போட்டோஸ்

தற்போது அவர் இணையதளங்களில் அடுத்தடுத்து போட்டோஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். பல நேரங்களில் கலக்கலாக இருக்கிறது. சில நேரங்களில் கலாய்க்கும்படி உள்ளது. இப்போது போட்டிருக்கும் போட்டோஸ் களை நெட்டிசன்கள் கலாய்ச்சு தள்ளுகிறார்கள். அவர் நீளமான தலை முடியை குட்டையாக வெட்டிக் கொண்டு தொப்புள் தெரியுற அளவுக்கு ஒரு டீ ஷர்ட்டும் ஜீன்சும் போட்டு குட்டி மதில் சுவரில் உட்கார்ந்து இருக்கிறார் .

கிழிஞ்சு போன ஜீன்ஸ்

கிழிஞ்சு போன ஜீன்ஸ்

அந்த ஜீன்ஸ் அங்கங்கே கிழித்துவிட்டு அவர் போட்டிருப்பது நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது இவரைக் கலாய்ப்பதற்கு. போட்டோஸ்கள் லாங்க்ல இருந்து எடுத்திருப்பதால் ஜூம் பண்ணி பார்த்து ரசிக்கிறார்களாம் சில ரசிகர்கள். அதுபோல இன்னொரு புகைப்படத்தையும் அப்லோட் பண்ணி இருக்கிறார். அதிலும் கவர்ச்சி பழமாக இருக்கிறார்.

கருப்பு பூனை

கருப்பு பூனை

கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் உள்ளாடையோடு எடுத்திருக்கும் புகைப்படம். இதையும் ரசிகர்கள் சூம் பண்ணி ரசித்து இருக்கிறார்களாம். அந்த போட்டோவில் இவர் கூட ஒரு கருப்பு பூனை குட்டி வைத்திருக்கிறார் .அது அவரது பையன் என்று சொல்லியிருக்கிறார். இப்படிச் சொன்னால் நெட்டிசன்களுக்கு சொல்லவா வேணும் ஏகத்துக்கும் சந்தேகம் கேட்டு கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள்.

எப்படியோ பொழுது போகுது எல்லோருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+