என்ன சின்னய்யா இந்த நேரத்துல... நீங்க போங்கு பண்றீங்க!
சென்னை: ராஜா ராணி சீரியலில் செம்பா படிக்காத பொண்ணு மாதிரியே வெகுளித் தனமா இயல்பா நடிக்கறது நல்லாருக்கு.
கார்த்திக் லேப்டாப் வச்சு வேலை பார்த்துட்டு இருக்கான். அங்க வர்ற செம்பா..சின்னய்யா கோயில்ல நான் பண்ணின சத்தியம் ஜெயிச்சுருச்சுன்னு வருத்தமா உங்களுக்குன்னு கேட்கறா.

இல்லையே நான் பண்ணின சத்தியம்தான் ஜெயிச்சுதுன்னு சொல்றான் கார்த்திக்.நான்தானே சின்னய்யா ஹரீஷுக்கும், வினோதினிக்கும் கல்யாணம்பண்ணி வைப்பேன்னு சத்தியம் பண்ணினேன்னு சொல்றா செம்பா.
நீ என்ன சொல்லி சத்தியம் பண்ணினேன்னு கேட்கறான். வினோவுக்கும் ஹரீஷுக்கும் கல்யாணம்பண்ணி வைப்பேன்னு சத்தியம் பண்ணினேன்னு சொல்றா. நான் என்ன சத்தியம் பண்ணினேன்னு கேட்கறான்.

ஒரு நல்ல பையனா பார்த்து வினோவுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சத்தியம் பண்ணினீங்கன்னு சொல்றா. அப்போ ஹரீஷ் நல்ல பையன்தானேன்னு கேட்கறான்.ஆமாம்.. ஆனா, அப்பவே ஹரீஷ் நல்ல பையன்தானே சின்னய்யா..நீங்க போங்கு சின்னய்யான்னு அப்பாவித்தனமா பேசறா செம்பா
கார்த்திக் அவளுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுக்கறான். அவ பிடிச்சு வாயில போட்டு முழுங்கறா.. என்ன சின்னய்யா இந்த நேரத்துல போயின்னு செம்பா வெட்கப்பட.. என் பொண்டாட்டிக்கு நான் எப்ப வேணா குடுப்பேன்..யார் முன்னாடி வேணா குடுப்பேன்னு சொல்றான்.

ஓ..யார் முன்னாடி வேணா குடுப்பீங்களா அவ்ளோ தைரியம் வந்துருச்சான்னு கேட்கறா. ஏன் என் பொண்டாட்டிக்குத்தானே குடுக்கிறேன்..நான் அடுத்தவன் பொண்டாட்டிக்கா குடுக்கறேன்னு கேட்கறான்.
கொடுத்துதான் பாருங்களேன் சின்னய்யான்னு அவ சொல்ல, என்ன பண்ணுவேன்னு கேட்கறான். அந்த நாக்கை இழுத்து வச்சு முடிச்சு போட்ருவேன்னு சொல்றா செம்பா. என்னது நாக்குக்கு முடிச்சான்னு கட்டிக்கறான் செம்பாவை..
இப்படித்தான் ராஜா ராணி சீரியலில் செம்பா கார்த்தி குடும்ப வாழ்க்கை போயிட்டு இருக்கு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications