வந்ததும் இப்படியா செய்வாங்க? புது சந்தியாவை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.. ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்
ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியா வீட்டு வேலை செய்வதை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் இன்றைய பிரமோ வெளியாகியிருக்கிறது.
ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியா இறந்த வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்ததால் குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாமியார் கூறி இருக்கிறார்.
ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியாவும், மாமியாரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் சொன்ன வேலையை செய்து கொண்டிருக்கிறார். இது நெட்டிசன்களின் மத்தியில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

நெட்டிசன்களின் குற்றச்சாட்டு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அதிகமாக ஆரம்பத்தில் இருந்தே கலாய்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் தற்போது சந்தியா கேரக்டரில் மூன்றாவது நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் தற்போது வெளியான ப்ரோமோ கலாய்க்கப்பட்டு வருகிறது. ஒரு படித்த ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் பெண் வீட்டையும் சமாளித்துக் கொண்டு தன்னுடைய கனவையும் எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது பற்றி தான் இந்த சீரியல் இருந்து வந்தாலும், இன்னும் இந்த சீரியலில் பல சம்பவங்கள் பிற்போக்குத்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

பிற மொழி சீரியல்
ராஜா ராணி 2 சீரியல் பிற மொழி சீரியலின் தழுவல் தான். இந்த சீரியல் என் கணவன் என் காதலன் சீரியலின் கதையைப் போன்று தான் இருக்கிறது. இந்த நிலையில் வேறு மொழிகளில் சீரியல் வந்தாலும் அது தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு என் கணவன் என் கண் தோழன் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். அதன் அடிப்படையில் ராஜா ராணி 2 சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் இந்த சீரியலை இயக்கி வருகிறார் என்று ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் வெளியாகி வந்தது. அதையே ஒரு பேட்டியில் பிரவீன் பென்னட் ஒத்துக்கொண்டார்.

வீட்டை துடைத்த சந்தியா
இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் சிவகாமி சஷ்டி விரதம் என்பதால் மற்றவர்களை திட்டிக்கொண்டு வீட்டை துடைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது சந்தியா ஒரு தற்கொலை கேஸ் விஷயமாக இறந்த வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப வருகிறார். இதை பார்த்த அவருடைய மாமியார் வீட்டை மீண்டும் துடைக்க சொல்கிறார். இந்த நிலையில் சந்தியாவும் குளித்து முடித்து வீட்டை துடைத்து கொண்டிருக்கிறார். அப்போது சந்தியாவை பார்ப்பதற்காக சில பெண்கள் வந்திருக்கின்றனர். அவர்கள் சந்தியாவிற்கு சல்யூட் அடித்துக் கொண்டு வாசலில் காத்திருக்க சந்தியா தன்னுடைய வீட்டை துடைத்து கொண்டிருக்கிறார். அதை ஓரமாக நின்று கெத்தாக ரசித்துப் பார்க்கிறார் சிவகாமி.

தவறான பிம்பம்
இந்த பிரமோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் ஆபீஸ்க்கு சந்தியா யூனிபார்ம் போட்டு கிளம்பிய பிறகு மார்க்கெட்டில் சென்று மீன் வாங்கி வர மாமியார் சொன்னதால், மீனை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் மீன் குழம்பு வைத்துவிட்டு ஆபீசுக்கு கிளம்பி சென்று அங்கே உயரதிகாரியிடம் திட்டு வாங்கியிருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் இதே தொடர்வதால் இந்த பூமர் கிழவி கிட்ட மாட்டிகிட்டு மீன் குழம்பு வைக்கவும், தரை துடைக்கவும், நீ என்னத்துக்கு ஐபிஎஸ் படிச்ச? இந்த மாதிரி கேவலமான மாமியாரும் இருக்க மாட்டாங்க, இந்த மாதிரி கோழையான போலீசும் இப்போ இருக்க மாட்டாங்க, எதுக்காக இப்படி தவறான ஒரு பிம்பத்தை சீரியலில் காட்டுகிறார்கள் என்று நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications