உதவ மறுத்த சந்தியாவுக்கு எதிராக சிவகாமி செய்த செயல்... ராஜா ராணி சீரியலில் எதிர்பாராத திருப்பம்
ஜெஸ்ஸியின் பியூட்டி பார்லர் விஷயத்தில் சந்தியா உதவாததால் சிவகாமி புது முடிவு எடுத்திருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலின் மார்ச் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெசியின் பியூட்டி பார்லர் பிரச்சனைக்கு உதவ சந்தியா மறுத்திருக்கிறார்.
சந்தியா மறுத்ததால் சிவகாமி கவிதாவின் பக்கம் தாவி இருக்கிறார். இதனால் புது பிரச்சனை சந்தியாவுக்கு வர இருக்கிறது.

மறுக்கும் சந்தியா
ராஜா ராணி சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் சரவணன் ஸ்டேஷனுக்கு சென்று சந்தியாவிடம் ஜெஸியின் பியூட்டி பார்லர் பிரச்சனையில் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்க, அதற்கு சந்தியா நான் வேலையில் சேரும்போது எடுத்த உறுதி மொழியில் என்னுடைய சொந்த விஷயத்துக்காக என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருக்கிறேன். அதனால் இதில் எதுவும் என்னால் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார்.

கண்டுபிடித்த ஜெஸி
அதே நேரத்தில் வீட்டில் ஜெஸ்ஸியின் அப்பா அம்மா வந்து இந்த பிரச்சனையை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெஸ்ஸியின் விஷயத்தை சந்தியா பாத்துக்குவா சரவணன் சந்தியா கிட்ட பேசுகிறேன் என்று சொல்லி இருக்கான் என்று சிவகாமி பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சரவணன் அங்கே வர சந்தியா என்ன சொன்னாள் என்று சிவகாமி கேட்க, சரவணன் இன்னும் பேசவில்லை என்று சொன்னதும், சிவகாமி கோபப்படுகிறார். ஜெசி சந்தியா சொந்த விஷயத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்த முடியாதுன்னு சொல்லி இருப்பார் என்று கண்டுபிடித்து பேசுகிறார். அப்போது சரவணன் திரும்பவும் நான் இதைப் பற்றி சந்தியா கிட்ட பேசுறேன் என்று சொல்லுகிறார்.

திட்டும் சிவகாமி
ஆனால் ஜெஸ்ஸியின் அப்பா அம்மா வேண்டாம் இனி இந்த விஷயத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். என்று சொல்லிவிட்டு ஜெஸ்ஸியை நீங்க உங்க வீட்டில் ஒரு பொண்ணா நெனச்சு பாத்துக்குவீங்க நெனச்சோம் ஆனா நாங்க எதிர்பார்த்து வந்தது தான் தப்பு என்று இப்ப புரிகிறது என அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். அவர்கள் சென்ற பிறகு சட்டப்படி பண்ணனுமாம் சட்டப்படி நம்ம ஊர்ல லீகலா போனா தான் இழுத்து அடிக்கிறாங்க. அதனாலதான் உன்கிட்ட ஒரு உதவி கேட்டோம் என்று சரவணனை சிவகாமி திட்டுகிறார்.

கட்சி மாறிய சிவகாமி
பிறகு பியூட்டி பார்லர் அருகே நின்று கொண்டு சிவகாமி புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது அந்த பக்கமாக வரும் கவிதா சிவகாமியிடம் மன்னிப்பு கேட்டு நல்லவள் போல பேசுகிறார். பிறகு என்னுடைய பிள்ளைங்க மூணு பேரும் எப்படியோ அப்படித்தான் எங்க மருமகள்களும் இந்த கடையை நல்லா பாரு இது என்னுடைய சின்ன மருமகள் உடையது என்று கடையை பற்றி கூறி அங்கு நடக்கும் பிரச்சனையையம் சிவகாமி சொல்ல, இனி இந்த பிரச்சனையை இனி நான் தீர்த்து வைக்கிறேன் என்று கவிதா கூறி இருக்கிறார்.

கண்டுபிடித்த சந்தியா
அடுத்தது கான்ஸ்டபிள் தங்கம் பியூட்டி பார்லர் பிரச்சனையை குறித்து விசாரிக்க அது கவிதாவின் வேலை தான் என்று தெரிய வருகிறது. இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்ல பிறகு சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட்டு ஒரு லாயரை பார்த்து இதை சரி செய்யலாம். அதில் ஏதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, சரவணன் சரி என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications