ராஜா ராணி சீரியல் நடிகை வைஷாலி- சத்யதேவ் தம்பதிக்கு குழந்தை பிறந்தது! நாஞ்சில் விஜயன் போட்ட பதிவு!
சென்னை: ராஜா ராணி சீரியல் நடிகை வைஷாலி தனிகாவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. வைஷாலி, விஷால் நடித்த 'கதகளி' என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் வைஷாலி தனிகா. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் 'காதல் கசகுதய்யா', 'கடுகு', 'சர்கார்', 'பைரவா', 'ரெமோ', 'சீமராஜா' உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து திரைப்பட வாய்ப்புகளுக்கு வைஷாலிக்கு சரியாக கிடைக்காததால் அவர் சீரியலில் வாய்ப்புகளை தேடினார். அப்போது அவருக்கு 'ராஜா ராணி' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலிலும் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்திருந்தார்.
இதையடுத்து அந்த சீரியலில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி', சன் டிவியில் 'ஆனந்த ராகம்' தொடர்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். இவர் அண்மையில் கார் வாங்கிய தகவலையும் பதிவிட்டிருந்தார்.
சுமார் 28 லட்சம் கொடுத்து தனது கணவர் சத்யதேவிற்காக கார் வாங்கியிருந்தார். இருவரும் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைஷாலி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
அவருக்கு அண்மையில் வளைகாப்பும் நடந்தது. இந்த விழாவுக்கு நாஞ்சில் விஜயன்- மரியா உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வைஷாலி தனிகாவுக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்தது. இதை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
வைஷாலியின் கணவர் சத்யதேவ் ஒரு நடன இயக்குநர். இவர் முகப்பேரில் சாண்டி மாஸ்டர் டான்ஸ் ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். இவர்களது குழந்தையை நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியா, குழந்தையுடன் சென்று பார்த்து வாழ்த்தினார். அவர் தனது இன்ஸ்டாவில் "மருமகன் பொறந்துட்டான்" என தெரிவித்திருந்தார். வைஷாலிக்கும் தேவிற்கும் வாழ்த்துகள் குவிகின்றன. வைஷாலி தனது 17 வயது முதலே நடித்து வருகிறார். இவரது திறமையை பார்த்த இயக்குநர் பாண்டிராஜ், இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அது போல் மிஸ்டர் மற்றும் மிஸஸ் சின்னத்திரையிலும் கணவர் தேவுடன் கலந்து கொண்டார். வைஷாலிக்கு நாஞ்சில் விஜயன் எப்படி சகோதரர் போன்றோ இந்திரஜா கணவர் கார்த்தியும் சகோதரர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications