நீங்க பார்க்குற மாதிரி எல்லாம் இல்லை.. நிஜத்தில் இதுதான்..! உண்மைகளை உடைத்த ராஜா ராணி மாமியார்
ராஜா ராணி சீரியலில் சிவகாமி கேரக்டரில் நடிக்கும் நடிகை பிரவீனா தன்னுடைய குணத்தை பற்றி ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சந்தியாவின் மாமியாராக சிவகாமி கேரக்டரில் நடிகை பிரவீனா நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் அம்மா கேரக்டரில் நடிகை பிரவீனா நடித்து பிரபலமாகி இருக்கிறார்.
இப்போது சன் டிவியில் இனியா சீரியலிலும் இனியாவின் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ராஜா ராணி சிவகாமி கேரக்டரில் நான் ஒரு பிரசண்டேஜ் கூட கிடையாது. அது நடிப்பு மட்டும்தான் என்று தன்னுடைய நிலையை ரசிகர்களுக்கு விளக்கி இருக்கிறார்.

ராஜா ராணி சிவகாமி
சீரியலாக இருந்தாலும் சரி, திரைப்படமாக இருந்தாலும் சரி என்ன மாதிரி கேரக்டரில் நடிகர்கள் நடிக்கிறார்களோ, அவர்களுடைய கேரக்டர் அப்படியே ரசிகர்கள் மனதில் நிறுத்தி விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவின் மாமியாராக நடித்து வரும் சிவகாமியை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்த சீரியல் பிற மொழியில் தளுவலாக இருக்கிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான என் கணவர் என் தோழன் எனும் சீரியலில் இருந்து இந்த சீரியல் எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் பரவி இருந்தது. ஆனாலும் இந்த சீரியலில் மாமியார் கேரக்டரில் நடிக்கும் பிரவீனாவை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

கொடுமை செய்யும் சிவகாமி
சந்தியா தன்னுடைய ஐபிஎஸ் கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதில் பல தடைகளையும் பிரச்சனைகளையும் ஆரம்பத்தில் இருந்து சிவகாமி செய்து வந்தார் .தற்போது ஐபிஎஸ் ஆன பிறகும் சந்தியாவை வீட்டு வேலை செய்ய வைப்பது, அவரை அனைவரும் முன்னாடியும் அசிங்கப்படுத்துவது என்று பல்வேறு செயல்களை சிவகாமி செய்து கொண்டு வரும் நிலையில் இவரை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றார்கள்.

அது என்னுடைய கையில் இல்லை
அனைவரும் என்னை திட்டுவதற்கு நான் வருத்தப்படவில்லை. அது சீரியல் அதோட கதை டைரக்டர் கையில்தான் இருக்கிறது. அவர் எப்படி வேண்டும் என்றாலும் மாத்தலாம் அதுபடி நான் நடிக்கப் போகிறேன் அவ்வளவு தான். இப்போதைக்கு நான் கொடுமை செய்யும் மாமியாராக இருக்கும் நிலையில் என்னுடைய கதையில் நான் நடிக்கிறேன் அதை பலர்த்திட்டுகிறார்கள். நாளைக்கே டைரக்டர் எனக்கு வேற மாதிரி கதையை கொண்டு சென்றால் நான் அப்படித்தான் போகப் போகிறேன் என்று கூலாக பேசியிருக்கிறார்.

எல்லோரும் ஒன்று தான்
அதுமட்டுமில்லாமல் ராஜா ராணி சீரியலில் இருந்து ஆலியா மானசா விலகும் போது அவர் கர்ப்பமாக இருந்ததால் எல்லோரும் பேசி தான் முடிவு எடுத்து அவர் வெளியே சென்றார். யாருக்கு எப்போது நிலைமை எப்படி மாறும் என்று தெரியாது. அது போல மூன்று சந்தியாக்களுமே எனக்கு ஒன்று தான். யாரும் ரொம்ப பெஸ்ட் என்று சொல்ல முடியாது. எல்லோருக்குமே டைம் இல்லாமல் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். காலையில் வரும் போது எல்லோரும் ஹலோ சேச்சி என்று சொல்வதுண்டு அதற்குப் பிறகு அவங்க வேலையில் தான் எல்லோரும் பிஸியாக இருப்பாங்க என்று கூறியிருக்கிறார்.

அதுதான் கஷ்டமாக இருக்கிறது
நான் வெளியே போகும் இடங்களில் சிலர் என்னிடம் ஏமா இப்படி மருமகளை கொடுமை பண்ற என்று கேட்பார்கள். அது எனக்கு கஷ்டமாக இருக்கு அது மட்டுமல்லாமல் சிவகாமி டயலாக் பேசுவதற்கு கூட எனக்கு கஷ்டமாக இருக்கும். என்னுடைய கேரக்டரில் ஒரு பிரசன்டேஜ் கூட சிவகாமி கிடையாது. சிவகாமி ரொம்பவே கண்டிப்பாக இருப்பாங்க ஆனா நான் அப்படி கிடையாது. குறிப்பாக இனியா சீரியலில் வருவது போன்ற கேரக்டர் என்னுடைய கேரக்டோடு ஒத்து வருவதால் எனக்கு அதில் நடிப்பது ஈசியாக இருக்கும் ஆனால் இந்த சிவகாமி கேரக்டர் எனக்கு ரொம்பவே டப்பாக இருக்கிறது. எனக்கு நெகட்டிவ் ரோல் எல்லாம் வந்தால் எனக்கு ரொம்ப கஷ்டம். அதுக்கு ட்ரைனிங் எடுத்து தான் நான் நடித்து இருக்கிறேன் என்று பல தகவல்களை கூறியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications