ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்..ரியா கூறிய விளக்கம்..வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ராஜா ராணி சீரியலில் இருந்து எதற்காக விலகினார் என்பதை பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு ரியா பதில் அளித்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன்பு வெளியேறி இருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே சந்தியா கேரக்டரில் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவர் விலகிய பிறகு ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார்.
ரியா விஸ்வநாதன் விலகிய பிறகு அவருக்கு பதிலாக ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரியா விலகியது பற்றி வதந்திகள் சமூக வலைத்தளத்தில் கிளம்பி வருகிறது. தற்போது அதற்கு ரியா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

முதல் சந்தியா ஆலியா மானசா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று பல்வேறு கேரக்டர்கள் மாற்றப்பட்டு விட்டனர். அதிலும் குறிப்பாக கதாநாயகியாக இருக்கும் சந்தியாவாக இப்போது மூன்றாவது சந்தியா நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில், அவருக்காகவே இந்த சீரியல் எடுக்கப்பட்டதாகவும் அவர் இந்த சீரியலுக்காக தான் முதல் குழந்தை பிறந்ததும் அதிகரித்த உடல் எடையை குறைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் அந்த நேரத்தில் வெளியானது.

சந்தியாவை அறிமுகம் செய்தல்
இந்த நிலையில் இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமான இருந்த நிலையில் அவர் இந்த சீரியலை விட்டு விலகி அதற்குப் பிறகு ரியா விஸ்வநாதனை இனி இவர்தான் சந்தியா என்று அறிமுகம் செய்து வைத்திருந்தார். அதை தொடர்ந்து இரண்டு வருடங்களாக ரியா நடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் இனி சந்தியாவாக நடிக்கப் போவதில்லை என்றும் தனக்கு இதுவரைக்கும் ஆதரவு தந்து ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.

பரவிய வதந்தி
இந்த நிலையில் ரியா விலகிய அடுத்த நாளே அவருக்கு பதிலாக ஆஷா கவுடா நடித்த எபிசோடு ஒளிபரப்பாக தொடங்கியது. இது ரசிகர்களின் மத்தியில் இப்ப வரைக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அது மட்டும் அல்லாமல் ரியா சீரியலில் இருந்து விலகுவதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷால் தான் என்றும், அவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் என்றும் இருவருக்கும் காதல் பிரேக் அப் ஆனதால் இந்த சீரியலை விட்டு விலகி விட்டார் என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரவி வந்து கொண்டிருக்கிறது. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ரியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் விலகியதற்கான காரணம் விரைவில் வெளிவரும் என்று சூசகமாக கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மற்றொரு பதிவில் காரணம் எனக்கே தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் இப்படி பதில் சொல்ல ரசிகர்கள் அப்போ காரணம் சொல்லாமல் உங்களை நீக்கிவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து திருமணம் பிக்ஸ் ஆனதால் தான் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினாரா? என்று பல்வேறு கேள்விகள் வர அது முற்றிலும் பொய்யானது என்று ரியா கூறியிருக்கிறார். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும். எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான் திருமணம் செய்வேன் என்று ரியா பதில் கொடுத்து இருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications