அசத்தலான ராஜலட்சுமி, செந்தில் தம்பதியின் சாமி சாமி டான்ஸ்... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: புஷ்பா படத்தில் தான் பாடிய சாமி சாமி பாடலுக்கு தன் கணவருடன் அசத்தலான ஆட்டம் போட்டுள்ளார் ராஜலட்சுமி.
Recommended Video
கண்ணுக்கு கண்ணாடி, கண்டாங்கி சேலை என இவருடைய லேட்டஸ்ட் கெட்டப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

கிராமத்து பாடலால் பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக சமூகவலைத்தளத்தில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு கிராமத்து ஜோடிதான் ராஜலட்சுமி மற்றும் செந்தில். இவர்களில் ஜோடிப்பொருத்தம் க்யூட்டாக இருக்கிறது என்று சொல்லும் ரசிகர்கள் ஒரு பக்கம் என்றால் இவர்களின் ஜோடி பாடல்கள் வேற லெவல் என்று வர்ணிக்கும் ரசிகர்கள் அதிகமானோர் இருந்து வருகின்றனர். இவர்களுடைய கிராமத்து இசை ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

வைரலான சின்ன மச்சான்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தங்களுடைய கிராமத்து இசையை உலகமெங்கும் கொண்டு வந்த இந்த ஜோடி பல திரைப்படங்களிலும் பின்னணி பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் பலருடைய இதயங்களை கலந்து கவர்ந்து கொண்ட இந்த ஜோடி பிரபுதேவா படத்தில் இடம்பெற்ற ஏ..ஏ..சின்ன மச்சான் என்னும் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த சூப்பர் ஹிட் பாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கிராமத்து இசையில் இவர்கள் பாடிய பாடல்கள் பல ஹிட் ஆகி இருக்கிறது.

ஹிட்டான சாமி சாமி பாடல்
எப்பதான் வருவீங்க, கோவக்கார மச்சானும் இல்ல எனும் பல பாடல்கள் இவர்களுடைய அசத்தல் குரலால் அனைவரையும் கவர்ந்துள்ளது. கிராமத்து இசை, நாட்டுப்புற பாடல் இவர்கள் இது தான் இவர்களுடைய அடையாளமாக இருந்தாலும் தற்போது பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கும் புஷ்பா படத்தின் பாடலை ராஜலட்சுமி பாடியுள்ளார். சாமி சாமி எனும் பாடல் ரஷ்மிதாவுக்கு மட்டுமல்லாமல் ராஜேஸ்வரிக்கும் பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிட்டது. தற்போது எந்த திசையிலும் இந்த பாடல்கள் தான் ஒலித்து வருகிறது. இந்தப் பாடலுக்கு பல நடிகர் நடிகைகள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

க்யூட்டான டான்ஸ்
சமூக வலைத்தளத்தில் சாமி சாமி பாடல் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அதை பாடிய ராஜலட்சுமி தன்னுடைய கணவருடன் சேர்ந்து டூயட் ஆட்டம் போட்டிருக்கிறார். அதில் அவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் மற்றும் இவர்கள் இருவரும் ஆடும் கலக்கல் டான்ஸ் வேற லெவல் வைரலாகி வருகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள் அதிகமாக குவிந்து வருகிறது .அதுவும் இவர்கள் ஜோடி பொருத்தம் செம்...ம என்று ரசிகர்கள் பலர் ஹார்டின்களை அனுப்பி வருகின்றனர். லேட்டஸ்ட் கெட்டப்பில் இவர்கள் எடுத்திருக்கும் புது முயற்சி சமூக வலைத்தளத்தில் பலருடைய வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications