ராஜராஜேஸ்வரி சீரியல் நடிகை ஞாபகம் இருக்குதா? இவருடைய கணவர் இந்த வில்லன் நடிகரா?
சென்னை: வெள்ளி திரைகளும் சின்ன திரையிலும் நடித்த மாளவிகா அவினாஷ் கணவர் அவினாஷ் பிரபல வில்லன் நடிகர் தான்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் வில்லனாக மாளவிகாவின் கணவர் அவினாஷ் நடித்திருக்கிறார்.
மாளவிகா தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ஒரு சில நடிகைகள் தான் வெள்ளிதிரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை மாளவிகா அவினாஷ். இவர் வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்ன திரையில் இவர் நடித்த ராஜராஜேஸ்வரி சீரியல், அண்ணி சீரியல், சிதம்பர ரகசியம், அண்ணி சீரியல், செல்லமே சீரியல் பலராலும் இப்ப வரைக்கும் பேசப்படும் வகையில் இருக்கிறது.
மாளவிகா அவினாஷ், மாதவன் நடித்த ஜே ஜே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஆறு, டிஸ்யூம், ஆதி, கள்வனின் காதலி, ஜெயம் கொண்டான், டிஷ்யூம், வந்தான் வென்றான், பைரவா உட்பட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவருடைய கணவர் பிரபல வில்லன் நடிகர் அவினாஷ் பல தமிழ் கன்னட திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த என்னை அறிந்தால், பரமசிவன் உட்பட பல திரைப்படங்களிலும் அவினாஷ் நடித்திருக்கிறார். மட்டுமல்லாமல் சந்திரமுகி திரைப்படத்தில் கூட அவினாஷ் சந்திரமுகியை விரட்டும் சாமியாராக நடித்திருப்பார்

கடந்த 2001 ஆம் ஆண்டு அவினாஷ் மற்றும் மாளவிகாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் தங்களது திருமண நாளை கொண்டாடிய அவினாஷ் மற்றும் மாளவிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மாளவிகா அவினாஷ் ஐந்து வயதிலிருந்து பரதநாட்டியம் கற்றுக்கொள்ள தொடங்கி இருக்கிறார். அதனாலேயே அவர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும், குறிப்பாக ஜெயா டிவியில் பரதநாட்டியத்திற்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தகதிமிதா என்ற விளையாட்டு நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கியிருந்தார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications