ராஜேஷ் ஆம்புலன்ஸில் கன்னத்தை பிடித்து கடைசியா சொன்னது.. இதுதான் நடந்தது, வதந்தி பரப்பாதீங்க: பிரபலம்
சென்னை: நடிகர் ராஜேஷின் இறப்பு குறித்த தேவையில்லாத வதந்திகள் இன்னமும் பரவி கொண்டிருக்கின்றன.. இதையடுத்து, ராஜேஷூக்கு அன்றைய தினம் என்ன நடந்தது? என்பது குறித்து குடும்பத்தினரிடம் பிரபல இயக்குனர் பாலாஜி பிரபு பேசியிருக்கிறார்.. அதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறி, பரவி வரும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ராஜேஷ் சிகிச்சை பற்றி தவறான தகவல்கள் உலா வருகிறது..

இங்கிலீஷ் மருத்துவம் இல்லாமல் மற்ற மருத்துவத்தையும் ராஜேஷ் ஊக்குவித்தார், யூடியூப் சேனல்களில் அந்த மருத்துவத்தை புரமோட் செய்து பேசிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.. ஆனால், இது எதுவுமே உண்மை கிடையாது..
ஷூட்டிங் பங்களா
சினிமாவிலேயே ராஜேஷ் நன்றாக சம்பாதித்தார்.. ராஜேஷ் ஹவுஸ் என்று கேகே நகரில் ஷூட்டிங் பங்களாவுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.. ரியல் எஸ்டேட்டிலும் ஈடுபட்டு பெரிய தொழிலதிபரானார்.. பல கோடிகளில் வருமானம் சம்பாதித்தார்..
அந்த நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வாங்கிய இடத்தை, ரிசார்ட்டாக மாற்றி, அதையும் ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டிருந்தார்.. இப்படி எல்லா பக்கமும் போதிய பணத்தை சம்பாதித்தார்.. ஆனால், பணம், பணம் என்று அலையவில்லை..
கமல்ஹாசன் ஒருமுறை ராஜேஷிடம் பேசும்போது, நீங்கள் நடிகராக சாவதைவிட, ரியல் எஸ்டேட் அதிபராக சாவதைவிட, பணக்காரராக சாகணும் என்று சொன்னாராம்.. இதனை பல யூடியூப் சேனல்களிலும் பெருமையாக ராஜேஷ் பேசிவந்தார்..
இறப்புகள் குறித்து வதந்தி
இந்நிலையில், அவரது இறப்பு குறித்து தேவையில்லாத வதந்திகள் பரவின.. வெளிநாடுகளிலும் ராஜேஷ் வியாபாரம் செய்து வருகிறார்.. இதற்காக அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்..
சமீபத்தில்கூட துபாய் சென்று வந்ததிலிருந்தே, ராஜேஷ் சோர்வாக இருந்து வந்துள்ளார்.. யாரிடமும் சரியாக பேசாமல், மந்தமாக இருந்ததாக அவரது வீட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
மூச்சுவிடுவதில் சிரமம்
இறப்பற்கு முன்தினம் இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.. மகனிடம் சென்று இதை சொன்னபோது, ஆஸ்பத்திரி போகலாமா? என்று மகன் கேட்டிருக்கிறார்..
அப்படி பெரிதாக எதுவும் இல்லை, பிறகு பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, தூங்கியிருக்கிறார்.. விடிகாலை 5.30 மணிக்கு மீண்டும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.. ராஜேஷூக்கு தெரிந்த சித்த மருத்துவர் அந்த பகுதியில் வாக்கிங் செல்லும்போது, ராஜேஷை சந்தித்து பேசிவிட்டு போவது வழக்கமாகும்.
மூச்சு திணறல் அதிகரிப்பு
அன்றைய தினமும் ராஜேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார்.. ராஜேஷிடம் பேசும்போது, மூச்சவிடுவதற்கு சிரமப்படுவதை கவனித்து, அதுகுறித்து மருத்துவர், கேட்டுள்ளார்.. அதற்கு ராஜேஷ், இரவிலிருந்தே இப்படி மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளது என்றும், அடிக்கடி இப்படி நடக்கும் என்றும் சொல்லி உள்ளார்.
ஆனாலும், ராஜேஷின் உடல்நிலை நிலை சீரியஸாக இருப்பரை அறிந்த டாக்டர், நாடி பிடித்து பார்த்துள்ளார். பல்ஸ் குறைவதை பார்த்து, உடனே ராஜேஷின் மகனை அழைத்து, ஆம்புலன்ஸை வரசொல்லுமாறு கூறியிருக்கிறார்..
சித்தப்பா - மகன்
மகனும் தன்னுடைய சித்தப்பா, ராஜேஷின் தம்பியான சத்யனுக்கு விவரத்தை சொல்லி, ஆம்புலன்ஸுக்கு போன செய்துள்ளனர்.. ஆம்புலன்ஸ் வருவதற்குள் ராஜேஷூக்கு மூச்சு திணறல் அதிகமாகி விட்டது. மகனும், சித்தப்பா, சித்த மருத்துவர் எல்லாரும் சேர்ந்து ஆம்புலன்ஸில் ராஜேஷை ஏற்றியிருக்கிறார்கள்..
அப்போது தான் இறக்க போவது ராஜேஷூக்கு தெரிந்துள்ளது.. உடனே மகனின் கன்னத்தை பிடித்து கிள்ளி, மகனின் கையில் முத்தம் தந்துள்ளார்.. அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸிலேயே அவரது உயிர் அடங்கிவிட்டது..
டாக்டர்கள் அறிவிப்பு
மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, வரும்வழியிலேயே மாரடைப்பால் உயிர் போய்விட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.. இதுதான் அன்றைக்கு நடந்ததே தவிர, சித்த மருத்துவர் பலமணி நேரம் பேசி கொண்டிருந்தார், பல மருந்துகளை சாப்பிட்டதால்தான் உயிர் பிரிந்தது என்றெல்லாம் வதந்திகள் பரவ துவங்கிவிட்டன.
அந்த சித்த மருத்துவர் ராஜேஷின் நெருங்கிய நண்பர்.. அடிக்கடி ராஜேஷை சந்தித்து பேசுபவர்.. அன்றைய தினமும் யதார்த்தமாக வீட்டுக்கு சென்றபோதுதான், ராஜேஷின் உடல்நிலை மோசமாக இருப்பதை கண்டுபிடித்து, ஆம்புலன்ஸை வரவழைக்க சொன்னவர்.. அப்படியிருக்கும்போது, அவருடன் தொடர்புபடுத்தி இந்த மரணத்தை பேசுவது சரியில்லை" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!












Click it and Unblock the Notifications