அப்பா பற்றி தப்பா பேசாதீங்க.. இன்னமும் வலியை தராதீங்க.. ராஜேஷின் மகள் திவ்யா உருக்கமான வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷ் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு, நடிகை வடிவுக்கரசி விளக்கம் தந்துள்ளார்.. மறைந்தவரை விமர்சிக்க வேண்டாம் என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதேபோல, தன்னுடைய அப்பாவை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று, ராஜேஷ் மகள் திவ்யா உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்.

4 நாட்களுக்கு முன்பு, Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. ராஜேஷ் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசி, அதற்கு பிறகு ராஜேஷ் பற்றின வதந்திகளுக்கு நீண்ட விளக்கத்தையும் தந்திருந்தார்..

Television Rajesh actor Rajesh

அந்த பேட்டியில் பாலாஜி பிரபு சொன்னபோது, "ராஜேஷ் சிகிச்சை பற்றி தவறான தகவல்கள் உலா வருகிறது.. அலோபதியை தவிர்த்துவிட்டு, மற்ற மருத்துவத்தை ராஜேஷ் ஊக்குவித்தார், யூடியூப் சேனல்களில் அந்த மருத்துவத்தை புரமோட் செய்தார் என்று தகவல்கள் உலா வருகின்றன.. அது எதுவுமே உண்மை கிடையாது..

நன்றாக சம்பாதித்தார்

சினிமாவிலேயே ராஜேஷ் நன்றாக சம்பாதித்தவர்.. கேகே நகரில் ஷூட்டிங்காக பங்களாவை வாடகைக்கு விட்டவர், ரியல் எஸ்டேட்டிலும் வெற்றி கண்டு பல கோடிகளில் வருமானம் பார்த்தவர்.. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வாங்கிய இடத்தை ரிசார்ட்டாக மாற்றி, ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டவர். இப்படி எல்லா பக்கமும் போதிய பணத்தை சம்பாதித்தார்.. ஆனால், பணம், பணம் என்று அலையவில்லை.. பணத்துக்காக யாரையும் அவர் புரமோட் செய்யவில்லை.

சித்த மருத்துவர்

ராஜேஷூக்கு பழக்கமான சித்த டாக்டர் தினமும் வாக்கிங் செல்லும்போது, ராஜேஷிடம் பேசிவிட்டு போவார். அன்றும் அப்படித்தான் யதார்த்தமாக வீட்டுக்கு போயிருக்கிறார்.

ராஜேஷ் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவதை கவனித்துவிட்டு, அதுகுறித்து கேட்டிருக்கிறார். நாடி பிடித்து பார்த்துவிட்டு, பல்ஸ் குறைவது கண்டு, உடனே ஆம்புலன்ஸை வரசொல்லுமாறு ராஜேஷ் மகனிடம் சொல்லியிருக்கிறார். இதற்கு பிறகே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சில நிமிடங்களில் ஆம்புலன்ஸிலேயே உயிர் போனது. மாரடைப்பால் உயிர் போய்விட்டதாக டாக்டர்களும் அறிவித்துள்ளனர்..

இதுதான் அன்றைக்கு நடந்ததே தவிர, சித்த மருத்துவர் பலமணி நேரம் பேசி கொண்டிருந்தார், சித்த மருந்துகளை சாப்பிட்டதால் இறந்துவிட்டார் போன்ற வதந்திகள் பரவுகின்றன. சித்த மருத்துவர் சொன்னதால்தான் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதே தவிர, அந்த மருத்துவருடன் தொடர்புபடுத்தி, மருந்துகளை தொடர்புபடுத்தி இந்த மரணத்தை பேசுவது சரியில்லை.. இது இயற்கையான மரணம்" என்று கூறியிருந்தார்.

வடிவுக்கரசி ஆவேசம்

இதே கருத்தைதான் நடிகை வடிவுக்கரசியும் நக்கீரன் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் நேற்று சொல்லி உள்ளார்.. "ராஜேஷ் நல்லபடியாக வாழ்ந்து இறந்திருக்கிறார்.. சித்த மருந்து சாப்பிட்டதாலதான் இறந்துட்டாருன்னு சிலர் சொல்றாங்க.. அவர் சித்த மருந்து சாப்பிட்டதை நீங்க அவர்கூட இருந்து பார்த்தீங்களா?

ஜோதிடம் உண்மையா?

ஜோதிடத்திலும்.. ஒரு ஜோதிடர் உண்மையா என்பதை தெரிந்துகொள்ள, தன்னுடையது என்று சொல்லாமலேயே தன்னுடைய ஜாதகத்தையே தந்து பார்க்க சொல்வார்.. அதில் ஓரளவு நம்பிக்கை வந்தபிறகு, அவரை பேட்டி எடுப்பார்.. அதுவும் மக்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தவே செய்தார்..

ரஜினி சார் ஒருமுறை சொன்னார், "ராஜேஷ் ஏதாவது ஒன்றை புதிதாக கண்டுபிடித்துவிட்டால், அதன்மூலம் நிறைய பேர் பலனடைய வேண்டும் என்று நினைப்பார்" என்றார்.. அதுதான் ராஜேஷ்.. தயவுசெய்து தவறாக பேசவேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்..

திவ்யா கண்ணீர் கோரிக்கை

அந்த பேட்டியிலேயே, ராஜேஷின் மகள் திவ்யா கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.. அதில், தவறான கருத்துக்களுடன், என்னுடைய அப்பாவின் மரணத்தை பற்றி பேசி, எங்களுக்கு இன்னமும் வலியை தர வேண்டாம்.. அவருடைய கடைசி பயணத்தில் எத்தனையோ பேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினீர்கள், அதற்கு உங்களுக்கெல்லாம் எங்களுடைய நன்றி..

அப்பாவை பற்றி எல்லாரும் பெருமையாக பேசுவதை கேட்க சந்தோஷமாக இருக்கு.. அதேசமயம், அவரை பற்றி தவறாக பேசுவதை பற்றி கேட்கவும் வேதனையாக இருக்கு. தயவுசெய்து இனிமேல் பேச வேண்டாம் என்று என்னுடைய குடும்பத்தினர் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன். நன்றி" என்று கேட்டுக் கொண்டுள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+