3 நடிகர்களின் அந்தரங்கம் அறிந்தவர் ராஜேஷ்.. இவங்களை பற்றி மூச்சு விடலயே.. செம கிரேட் மேன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ராஜேஷை எம்ஜிஆருக்கு வேண்டப்பட்ட ஆளு என்பார்கள்.. ஆனால், கலைஞரிடமும் நெருக்கம் கொண்டிருந்தார்.. எம்ஜிஆரையும் தாண்டி அதிகமாக ராஜேஷ் பேசியது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றிதான். அளவில்லாமல் புகழ்ந்து பேசுவார்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.. இதைத்தவிர, ராஜேஷ் மீது அதிகமாக நம்பிக்கை வைத்த 3 நடிகர்களை பற்றின தகவல்களையும் செய்யாறு பாலு பகிர்ந்து கொண்டுள்ளார்.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "நடிகர், ஜோதிடர், தொழிலதிபர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், டப்பிங் கலைஞர், இவைகளை தாண்டி அற்புதமான மனிதர் ராஜேஷ்.. எள்ளளவு செய்துவிட்டு, கடலளவு சொல்பவர்கள் மத்தியில், வலது கை செய்வதை இடது கைக்கு தெரியாத அளவுக்கு பல உதவிகளை செய்தார் ராஜேஷ் என்பது எனக்கு தெரியும். அதேபோல ஜோதிடத்தை புட்டு புட்டு வைத்துவிடுவார்..

விளைநிலம் - கிரகப்பிரவேசம்

28 வருடங்களுக்கு முன்பு, ராமாவரம் பகுதியில், அதுவும் ஏரி விளைநிலம் பகுதியில் வீடு கட்டியிருந்தார்.. இந்த இடத்தில் எப்படி வீடு கட்ட முடியும் என்று அனைவருமே யோசித்தார்கள்.. அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் வந்திருந்தார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வந்து ஓய்வில் இருந்தார் எம்ஜிஆர்..

எப்போதுமே ராஜேஷ் மீது அவருக்கு அன்பு உண்டு. அதையும் தாண்டி, தன்னுடைய ராமாவரம் தோட்டம் பகுதியில் சினிமா நடிகர் ஒருவர் வீடு கட்டியிருந்தது எம்ஜிஆருக்கு மகிழ்ச்சியை தந்தது.. அதனால்தான் கிரகப்பிரவேசத்துக்கு நேரில் வந்து வாழ்த்தினார். இதை அடிக்கடி சொல்லி ராஜேஷ் பூரித்து போவார்.

காளிமுத்து - பராசக்தி சிவாஜி

முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்து, சீமானின் மாமனாரிடம்தான், எம்ஜிஆரை அறிமுகப்படுத்த சொல்லி கேட்டாராம் ராஜேஷ்.. அதன்படியே அறிமுகப்படுத்தி வைத்தபோது, "பராசக்தி சிவாஜி போலவே இருக்கியே" என்றாராம் எம்ஜிஆர். ராஜேஷை எம்ஜிஆருக்கு வேண்டப்பட்ட ஆளு என்பார்கள்.. ஆனால், கலைஞரிடமும் நெருக்கம் கொண்டிருக்கிறார்..

எம்ஜிஆரையும் தாண்டி அதிகமாக ராஜேஷ் பேசியது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றிதான். "சிவாஜி யாரிடமும் சரியாக பேச மாட்டார்.. பிறரை மூக்குடைத்து பேசிவிடுவார், அடுத்தவரை நிறைய கிண்டலடித்து பேசுவார்.. கர்வத்தின் உச்சம் பெற்றவர்" என்றெல்லாம் சிவாஜியை பற்றி சொல்வார்கள்.. ஆனால், சிவாஜி பற்றின இந்த கணிப்புகளையெல்லாம் பொய் என்று உடைத்து சொன்னார் ராஜேஷ்...

3 பிரபலங்கள்

தன்னால் மறக்க முடியாத 3 நடிகர்களை பற்றி ராஜேஷ் ஒருமுறை சொன்னார்.. அதில், "ஒளிவு மறைவில்லாமல் என்னிடம் 3 நடிகர்கள் பேசியிருக்கிறார்கள்.. இதில் முதல் நபர் ஜெமினி கணேசன்.. A to Z வரை தன்னுடைய அனைத்தையும் என்னிடம் சொன்னார்.. அந்தரங்கத்தைகூட சொன்னார்.. உடனே நான் அவரை தடுத்து, சார் சார் இதெல்லாம் சொல்ல வேண்டாம் என்றேன்..

ஆனாலும் ஜெமினி விடவில்லை.. என்னுடைய அந்தரங்கத்தை தெரிந்து நீ என்ன செய்ய போகிறாய்? நீ ஏதாவது தொடர் கதை, புத்தகம் எழுதினால், இந்த விவரங்களை அதில் சேர்த்து எழுதிவிடு" என்று சொல்லி அனைத்தையும் என்னை நம்பி சொன்னார்.

ராம்குமார், பிரபு, கமலா அம்மாள்

அதுபோன்றவர்தான் சிவாஜி கணேசன்.. எனக்கு 2 முறை பரிசு பொருட்களை தந்தார்.. எத்தனையோ திரைக்கலைஞர்களை பார்த்த சிவாஜி, என்னிடம் மனம் விட்டு பேசினார்.. யாரோ ஒரு கிராமத்திலிருந்து நடிக்க வந்தவனிடம் குடும்ப விஷயங்களை பேசணுமா? என்றில்லாமல் அனைத்தையும் கூறினார்.

ஒருமுறை என்னிடம், "உன்னை பார்க்கும்போது, உன்னிடம் சில விஷயங்களை மனம்விட்டு சொல்லணும்னு தோணுதுடா" என்று சொல்லி பல விஷயங்களை சொன்னார் சிவாஜி.. ராம்குமார், பிரபு, கமலா அம்மாள் கிட்டகூட இதையெல்லாம் சொன்னாரா தெரியவில்லை..

3 மதிக்கத்தக்க நபர்கள்

3வது நபர், உலக நாயகன் கமல்ஹாசன்.. தன்னுடைய பர்சனல், சினிமா, தன்னை முதுகில் குத்திய நபர்கள், யார் யாரிடம் காதல் வயப்பட்டார்? என்பதையெல்லாம் என்னிடம் சொன்னார்.. இவ்வளவும் சொல்லிவிட்டு, "இதெல்லாம் புத்தகமாக எழுதிடுவீங்களோ?"ன்னுகூட கமல் சிரித்து கொண்டே கேட்டார்..

"அப்படி புத்தகம் எழுதினால் அது விலைமதிக்க முடியாததாக இருக்கும்" என்று சொன்னேன்.. எதற்காக கமல் என்னிடம் அத்தனையையும் சொன்னார் தெரியவில்லை.. ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் இந்த மூன்று பேரும் என்னை நம்பி சொன்ன எந்த விஷயத்தையும், இதுவரை என்னுடைய குடும்பத்தினரிடமும் நான் சொன்னதில்லை" என்று ராஜேஷ் கூறியிருந்தது, அவருடைய கண்ணியம்" என்றார் செய்யாறு பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+