பலிக்கலியே ராஜேஷின் ஜோதிடம்.. திடீர் இறப்பு இதனால்தானா? குண்டை தூக்கிப் போட்ட நடிகர் தியாகு: பிரபலம்
சென்னை: எம்ஜிஆர் உடல்நிலை கெட்டு, சிகிச்சையில் இருந்தார்.. ராஜேஷ் அவரை சென்று பார்த்தபோது, சில லட்ச ரூபாய்களை தந்தார் எம்ஜிஆர்.. அந்த பணத்தில்தான் ரியல் எஸ்டேட் துவங்கினார் ராஜேஷ்.. அந்த நன்றியுணர்வுக்காகவே, துணைவியார் ஜானகி அம்மையாருடன் இணைந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.. ஜானகி அணிக்காக பிரச்சாரம் செய்ததால், குற்ற உணர்ச்சியால் ஜெயலலிதாவை நீண்ட காலமாக சந்திக்காமல் இருந்தார்" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Sakthi Cine News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து, நடிகராகி, ரியல் எஸ்டேட் அதிபராகி, ஓட்டல் ஓனராகி, எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி முதல்வராகி, நம்மை விட்டு இப்போது பிரிந்துள்ளார் ராஜேஷ்..

காரல் மார்க்ஸ் தத்துவம்
மன்னார்குடி அணைக்காடு கிராமத்தில் பிறந்தவர்.. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்.. திருவல்லிக்கேணி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.. சினிமாவில் ஆர்வம் சின்ன வயதிலிருந்தே இருந்தது.. ஆரம்ப காலத்திலேயே காரல் மார்க்ஸை குருவாக ஏற்றுக் கொண்டாலும், வாழ்க்கை, தொழிலுக்கு காரல் மார்க்ஸின் தத்துவம் துளியும் அவருக்கு பயன்படவில்லை.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆபீஸிலேயே ஆரம்ப நாட்களில் இருந்ததால், அவள் ஒரு தொடர்கதை படத்தில் சிறு வேடம் நடிக்க கிடைத்தது.. பிறகு கன்னிப்பருவத்திலே படத்தில் ஆண்மையிழந்த கேரக்டரில் நடிக்க, பல நடிகர்கள் நடிக்க மறுத்தார்கள்.. இதற்குபிறகுதான், ராஜேஷ் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முன்வந்தார்.. இதில் முதன்முதலாக பாக்யராஜ் வில்லனாக நடித்திருந்தார்..
அந்த 7 நாட்கள்
அதனை தொடர்ந்து அந்த 7 நாட்கள் என்ற அற்புதமான காதல் படத்திலும் ராஜேஷை நடிக்க வைத்தார் பாக்யராஜ். இதற்கு பிறகு, ராஜேஷின் திரைப்பயணம் மெல்ல மெல்ல உயர்ந்தது. ஹீரோ, குணச்சித்திர வேடம். டிவி சீரியல் வரை சென்றுவிட்டார்..
எனினும் இந்த சினிமா வாழ்க்கை தனக்கு சோறுபோடாது, நிரந்தர வாழ்வை தராது என்ற காரணத்தினால், ஆரம்பத்திலேயே ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கினார். நடிகர்களில் முதன்முதலில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கியவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.. பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜேஷ் செய்தார்..
சினிமா நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சினிமா பத்திரிகையாளர்களுக்கும், பூந்தமல்லியில் தவணை முறையில் இடம் கொடுத்தவர் ராஜேஷ்.. அன்று 20 ஆயிரம் விற்ற நிலம், இன்று கோடிக்கணக்கில் மதிப்பாகிறது..
ராஜலட்சுமி ரியல் எஸ்டேட்
தன்னுடைய ரியல் எஸ்டேட் தொழில் கம்பெனிக்கு ராஜலட்சுமி என்று பெயர் வைத்தார். நான் அப்போது அவருடன் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.. கமல்ஹாசன் அம்மா பெயரை ரியல் எஸ்டேட்டுக்கு வைத்திருக்கிற்ரகளே? கமல் ஏதாவது உங்களுக்கு உதவி செய்தாரா? என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை, ராஜலட்சுமி என்றபெயர் பிடித்திருந்தது, வைத்துவிட்டேன்.. கமல் சாரும் என்னை வாழ்த்தினார் என்றார்..
இதற்கு பிறகு சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ராஜேஷ் உணவு விடுதி நடத்தினார்.. நல்ல வருமானம் வந்தது.. 20 பத்திரிகையாளர்களை அழைத்து சென்று, வயிறார உணவு போட்டு அனுப்பினார்.. 6 வருடம் கழித்து அந்த ஓட்டலை மூடிவிட்டார்.. பிறகு முதன்முதலில் ஷூட்டிங் பங்களாவை சென்னையில் கட்டினார்..
சில லட்சங்கள் தந்த எம்ஜிஆர்
எம்ஜிஆர் அப்போது உடல்நிலை கெட்டு, சிகிச்சையில் இருந்தார்.. ராஜேஷ் அவரை சென்று பார்த்தபோது, சில லட்ச ரூபாய்களை தந்தார் எம்ஜிஆர்.. அந்த பணத்தில்தான் ரியல் எஸ்டேட் துவங்கினார்.. அந்த நன்றியுணர்வுக்காகவே, துணைவியார் ஜானகி அம்மையாருடன் இணைந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.. ஜானகி அணிக்காக பிரச்சாரம் செய்ததால், குற்ற உணர்ச்சியால் ஜெயலலிதாவை நீண்ட காலமாக சந்திக்காமல் இருந்தார்.
பிறகு மு.க. ஸ்டாலின் முதலமைச்சரானதும் அவரை சென்று சந்தித்தார்.. எம்ஜிஆர் கல்லூரி முதல்வர் பதவி தரப்பட்டது. ஆனால்,
அரசு எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியின் முதல்வராக இருந்துகொண்டே எடப்பாடி பழனிசாமியை சென்று சந்தித்தார்.. இந்த விவரம் அரசுக்கு கிடைக்கவே, அந்த பதவியிலிருந்து ராஜேஷ் நீக்கப்பட்டார்..
90 வயது வாழ்க்கை
பிறகுதான் யூடியூப்களில் கவனம் செலுத்தினார்.. ஜோதிடம் கற்று தந்தார்.. கம்யூனிஸ்ட்காரராக இருந்த ராஜேஷ், கேடுகெட்டவர்களுக்கெல்லாம் ஜோசியம் சொன்னார்..
சமீபத்தில் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்துக்கு சென்ற ராஜேஷ், "90 வயசு வரை வாழ, என்கிட்ட சில விஷயம் இருக்கு.. அதை பிறகு சொல்கிறேன்" என்று ஐசரி கணேஷிடம் சொன்னாராம்.. அந்த 90 வயசுவரை வாழ, முதலில் ராஜேஷ் ஜோதிடம் பார்த்திருக்கலாமே? ஆக, ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு ஜோதிடம் பொருந்தாது. கிறிஸ்தவராக இருந்துகொண்டு, இல்லாத சித்தர்களை பற்றியெல்லாம் பேசினார்.
குண்டை தூக்கி போட்ட தியாகு
ராஜேஷ் சொல்லமுடியாத அளவுக்கு கடனில் இருந்ததாகவும், அந்த வருத்தத்தில் இருந்ததாகவும் நடிகர் தியாகு இப்போது குண்டை தூக்கி போட்டுள்ளார், அப்படி எந்த கடனிலும், வருத்தத்திலும் ராஜேஷ் இல்லை.. ஹேப்பியாகவே இருந்தார்.. எம்ஜிஆர் வழியில் நடந்த ராஜேஷ், சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்.. அட்சர சுத்தமாக பேசுகிற பச்சை தமிழன் ராஜேஷ்.. ஆனால், நல்லா தமிழ் பேசினாலே இன்றுள்ள இயக்குனர்களுக்கு பிடிக்காது" என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications