Coolie: ரஜினி ஓகே சொன்னது பெரிய விஷயம்! நான் வில்லன் மட்டும் இல்ல! நாகார்ஜுனா கொடுத்த அப்டேட்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் நாகார்ஜூனா பேசிய பேச்சு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

நாகார்ஜூனாவின் மிரட்டல் வில்லன் கதாபாத்திரம்
நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜூனா, "எனக்கு லோகேஷ் கனகராஜின் 'கைதி' மற்றும் 'விக்ரம்' படங்கள் ரொம்பப் பிடிக்கும். பொதுவாகவே, அவரது படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஹீரோவுக்குச் சமமாகத்தான் இருக்கும். குறிப்பாக, 'விக்ரம்' படத்தில் வில்லன்களுக்குச் சரிசமமான ரோல் கொடுத்திருப்பார் லோகேஷ். அதுபோலத்தான் 'கூலி' படத்திலும் எனக்கு ஹீரோவுக்குச் சமமான ரோலை அவர் கொடுத்துள்ளார்," என்று கூறினார்.
"கதை கேட்டு முடிந்தவுடன் என்னுடைய முதல் கேள்வி, 'ரஜினி சார் இதற்கு ஓகே சொல்லிட்டாங்களா?' என்பதுதான். ஏனென்றால், என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக, ரஜினி சாருக்குச் சமமான ஒரு ரோலாக இருந்தது. அதனால் தான், ரஜினி சார் இதற்கு ஓகே சொல்லிட்டாங்களே என ஆச்சரியத்துடன் கேட்டேன்," என்று நாகார்ஜூனா தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் பெருந்தன்மை
நாகார்ஜூனா இதுவரை பண்ணாத ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் 'கூலி' படத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தும், "நாகார்ஜூனா வில்லனாக நடித்தது பற்றியும், அவரின் கதாபாத்திரம் பற்றியும்" உயர்வாகப் பேசியிருந்தார்.
"உண்மையிலேயே இதற்கெல்லாம் ரஜினி ஓகே சொன்னது பெரிய விஷயம்தான்," என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், படத்தில் நடித்த அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் ரஜினியின் பெருந்தன்மையைப் பலர் பாராட்டி வருகின்றனர்.
கூலி - வின்டேஜ் ரஜினியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்
'கூலி' ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், படத்தின் குழுவினர் உட்பட நாகார்ஜூனா, சத்யராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். ரஜினிகாந்த், வீடியோ மூலம் வந்து படத்தைப் பற்றிப் பேசினார். படத்தில் சௌபின் ஷாஹிர், சத்யராஜ், அமீர் கான் ஆகியோரும் இருப்பதால், அனைவரின் கதாபாத்திரங்களும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கூலி' டிரெய்லரில், ரஜினியின் ஒவ்வொரு தோற்றமும், வசனங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. டிரெய்லரில் வரும் கடைசி ஷாட்டில் ரஜினியின் குறும்பும், 'வின்டேஜ் ரஜினி'யை லோகேஷ் கொண்டு வர முயற்சி செய்திருப்பதாக அவர் கூறியதும், ரசிகர்கள் மத்தியில் 'கூலி' படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
-
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications