Coolie: 786 நம்பர் உசுரையே காப்பாத்திடுச்சே.. தீ போல வருது ரஜினிகாந்த் கூலி! ரூ.650 கோடி? குட்நியூஸ்
சென்னை: லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் , ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14ந் தேதி உலகளவில் வெளியாக போகிறது.. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் உச்சக்கட்டத்தில் உள்ளன.. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கூலி உருமாறியுள்ளது.. இந்நிலையில், இப்படம் குறித்து 2 எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.. இது ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி "கூலி படத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. இந்த படத்தை வெளிநாட்டில் வெளியிட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன.. இதற்காக சென்சார் போர்டிலும் கூலி படத்தை பார்த்திருக்கிறார்கள்.. இதையடுத்துதான், கூலி படத்தின் கதையை சிலர் சொல்லியிருக்கிறார்கள்..

ஹார்பரில் கூலித் தொழிலாளர்கள் பலரும் கஷ்டங்களை, அனுபவிக்கிறார்கள்.. இவர்களது கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் குறித்து ரஜினி தட்டி கேட்பது போல இக்கதை உள்ளதாம்.
பொதுவாக ஹார்பர் என்றாலே தங்க கடத்தல், போதை கடத்தல், கொலை, கொள்ளை போன்றவையும் நடக்கும்.. எனவே, இந்த படமும் ஹார்பர் பின்னணியில் நடப்பதால், பல விஷயங்களை சுவாரஸ்யமாக லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார்.
கூலி - டபுள் எக்ஸ்க்ளூசிவ்
மன்னன், உழைப்பாளி போன்ற படங்களில் கூலித் தொழிலாளர்களுக்காக தட்டிக்கேட்டு நடித்திருப்பார் ரஜினி.. அதுபோல, ஹார்பரில் உள்ள தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் அநீதிகளை தட்டிக்கேட்பது போலவும் பேசுகிறாராம் ரஜினி.. அந்தவகையில் கதைக்களம் இதுவாகவே உள்ளது.
பொதுவாக ஹார்பர் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் எல்லாமே, வெற்றிகரமாக அமைந்துவிடும்.. புஷ்பா 2 அப்படித்தான் வெற்றி பெற்றது.. பல வருடங்களுக்கு தீ என்ற படத்தில், ஹார்பர் தொழிலாளியாக ரஜினி நடித்திருந்தார்.. அந்த காலத்தில் இந்த தீ படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படமாகும்.
786 பேட்ஜ்
786 என்ற பேட்ஜ்ஜை தன்னுடைய பாக்கெட்டிலேயே ரஜினி கட்டியிருப்பார்.. திடீரென அந்த பேட்ஜ் கயிறு அறுந்துவிடும்.. எனவே, அந்த பேட்ஜை தன்னுடைய பாக்கெட்டில் எடுத்து வைத்திருப்பார்.. ஒரு சீனில் ரஜினியை நெஞ்சை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள்.. ஆனால், பாக்கெட்டில் பேட்ஜ் இருந்ததால், குண்டு அவரது இதயத்தில் பாயாமல், ரஜினியின் உயிர் காப்பாற்றப்படும்.. இப்படியான காட்சிகள் அப்போது ரஜினி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது..
இப்போது லோகேஷ் கனகராஜ், ஹார்பர் தொழிலாளர்களின் வலியை சொல்லியிருக்கிறார்.. மாஸ் படத்தை எப்படி மக்களுக்கு தரவேண்டும் என்ற பல்ஸ் தெரிந்தவர் லோகேஷ்.. ஹார்பர் பின்னணியில் ரஜினி வைத்து, சுவாரஸ்யமாக தந்துள்ளார்.. மொத்தத்தில் இது ரஜினிக்கான படமாக இருக்கும்.. இதில் லோகேஷ் தன்னுடைய திறமையை காட்டியிருக்கிறார்..
ரூ.650 கோடிக்கு பிசினஸ்
தமிழ்நாட்டில் 90 சதவீத தியேட்டர்களில் இப்படம் வெளியாவதாக தெரிகிறது..ஆனால் தெலுங்கானா, ஆந்திராவில் மட்டும் ஒரு சிக்கல் உள்ளது.. காரணம், வார் 2 என்ற ஜூனியர் என்டிஆர் படமும் வெளியாவதால், அங்கே ஸ்கிரீன்ஸ் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.. ஹிருத்திக் ரோஷனும் இந்த வார் 2 படத்தில் நடித்துள்ளதால், வடமாநிலங்களில் எதிர்பார்க்கும் அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா தெரியவில்லை..
மொத்தத்தில் 4000 முதல் 6000 தியேட்டர்களில் கூலி படம் வெளியாக வாய்ப்புள்ளது.. வெளிநாடுகளை எடுத்துக் கொண்டால், ஜப்பான், சீனாவில் ரஜினிக்கென்றே தனி ரசிகர்
கூட்டம் உள்ளது..90 முதல் 100 நாடுகளில் கூலி படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது..
கூலி படத்தை பொறுத்தமட்டில் மற்றொரு எக்ஸ்க்ளுசிவ் தகவல் என்னவென்றால், ரூ.200 கோடிக்கு டேபிள் பிராஃபிட்டே வந்துள்ளது.. அந்தவகையில் இந்த படத்துக்கு வியாபாரமே ரூ.650 கோடிக்கு நடந்துள்ளதால், 1000 கோடியை கூலி படம் வசூலை அள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
நம்பர் 1 கூலி
நேற்றைய தினம் cheyyaru Balu என்ற தன்னுடைய யூடியூப் சேனலில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூலி படத்தை பற்றி பேசியிருந்தார்..
அதில், "2025-ன் மிக முக்கியமான படம் கூலி.. இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களின் வசூலை எடுத்து பார்த்தால், கூலி அளவுக்கு எதுவுமே வராது என்றே தெரிகிறது.. பெரிய நடிகர்களின் படமும் இந்த வருடத்தில் இனி வராது என்பதால், ரஜினியின் கூலி படம் வசூலில் நம்பர் 1 இடத்தை கூலி பெறும் .
இப்பவே பல இடங்களில் டிக்கெட்டுகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. அமெரிக்காவில், வரலாறு காணாத புக்கிங் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது.. ஒரு டிக்கெட்டின் விலை 35 டாலர் அதாவது 3000 ரூபாயாம்.. மொத்தமாக அங்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் நீங்கள் கூலி படத்தை பார்ப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பேயே, நாங்கள் பார்த்துவிடுவோம் என்று அமெரிக்காவில் சொல்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications